வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2024ல் யுவன் இசையமைக்கும் 12 இடங்களின் மொத்த லிஸ்ட்.. தளபதிக்காக செய்யப் போகும் தரமான சம்பவம் 

Music Composer  Yuvan Shankar Raja Upcoming In 2024:  இப்போது இருக்கும் இளசுகளின் தூக்கம், காதல் தோல்வி, மன உளைச்சல் என எல்லா பிரச்சனைகளுக்கும் இசை டானிக் கொடுக்கக் கூடியவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய பாடல்கள் தான் எல்லா சூழ்நிலையிலும் எனர்ஜி பூஸ்டர் ஆக இருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளாக மறக்க முடியாத பாடல்களையும், ஹீரோக்களுக்கு மாஸ் பிஜிஎம் போட்டு என்ட்ரி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 2024ம் ஆண்டில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது. அந்த படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

மங்காத்தா படத்தின் மூலம் தல அஜித்துக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த யுவன், இப்போது விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time)’  என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தளபதிக்காக தரமான சம்பவத்தை செய்து கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்ச்சியாக பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்திற்குப் பிறகு, இப்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். அதை போல் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘ஏழுமலை ஏழு கடல்’  படத்தின் இசையமைப்பாளரும் யுவன் சங்கர் ராஜா தான். 4000 ஆண்டு கால காதலை கூறும்படியுமாக ஏழுமலை ஏழு கடல் இருக்குமாம்.

Also Read: நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

2024ல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களின் லிஸ்ட்

அதேபோல் டாடா பட புகழ் கவின் இயக்குனர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் வெற்றிமாறன் கதையில் சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் தான். இந்த படம் செங்கல் சூளையை பின்னணியாக கொண்டு உழைக்கும் மக்களுக்கான கதைதான்.

இதன் தொடர்ச்சியாக அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்திற்கும், பகத் பாசில்- வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்திற்கும், பா. விஜய் இயக்கத்தில்  ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா நடிக்கும் ‘மேதாவி’  படத்திற்கும், அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’  என்ற படத்திற்கும் மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா தான்.

அதோடு வரும் மார்ச் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென்னியின் ‘கேங்க்ஸ் ஆப் கோதாவரி’ படத்திற்கும், நகைச்சுவை நடிகர் புகழ் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்(Mr Zoo Keeper)’ படத்துக்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார். இவ்வாறு மேலே குறிப்பிட்டு இருக்கும் இந்த 12 படங்களுமே யுவன் இசையில் இந்த வருடம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி இளசுகளை குஷிப்படுத்தப் போகிறது.

Also Read: யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்

Trending News