செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

58 வயதில் AR ரகுமான் சேர்த்து வைத்து இருக்கும் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு!. எல்லா புகழும் இறைவனுக்கு தான்!

AR Rahman: 90ஸ் மற்றும் 2k கிட்ஸ்களால் பெரிய பாய் என கொண்டாடப்படுகிறார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சமீபத்தில் அடங்காத அசுரன் பாட்டு மூலம் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அது மட்டும் இல்லாமல் மனைவியை பிரிவதாக இவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது கடந்த வருடத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏ ஆர் ரகுமான் இன்று தன்னுடைய 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரோஜா படம் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் சங்கர் மற்றும் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து திரை இசையில் பெரிய மாயாஜாலத்தை ஏற்படுத்தினார்.

ஏ ஆர் ரகுமானுக்கு இந்த மாதிரி மாடர்ன் மியூசிக் மட்டும் தான் போட தெரியும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் தான் கிழக்கு சீமையிலே படத்திற்கு இசையமைத்து ஆள் ஏரியாவிலும் நான் கில்லி என்று நிரூபித்தார்.

இவருடைய பிறந்த நாளில் இத்தனை வருடம் சினிமாவில் சம்பாதித்து எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் என பார்க்கலாம்.

ஒட்டு மொத்த சொத்து மதிப்பு!

ஏ ஆர் ரகுமானின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 2100 கோடி ஆகும். ஒரு படத்திற்கு இசையமைக்க பதினைந்து கோடி சம்பளம் வாங்குகிறார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் இவர்தான். அதேபோன்று ஒரு பாடலுக்கு மூன்று முதல் ஐந்து கோடி சம்பளமாக பெறுகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் பாடகர் லிஸ்டிலும் இவர் இருக்கிறார். ரகுமானுக்கு சென்னை மும்பை மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சொந்தமாக சொகுசு பங்களா இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் சென்னை மற்றும் மும்பையில் நவீன இசைக்கூடத்தை நிறுவி இருக்கிறார். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த கோடிக்கணக்கில் சம்பளமாக பெறுகிறார்.

ஏர்டெல், டொயோட்டா போன்ற ஒரு சில நிறுவனங்களுக்கு அம்பாசிடராகவும் இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமானுக்கு சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம்.

சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ஸே டேகன், ஜாகுவார், ஆடி க்யூ 7, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், வால்வோ, பென்ஸ் எஸ் கிளாஸ், பார்ச்சூனர் போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

Trending News