திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பத்து தலைமுறைக்கும் சேர்த்து வைத்த AR ரகுமான்.. ஆஸ்கார் நாயகனின் அசர வைக்கும் சொத்து மதிப்பு

 Music Director AR Rahman’s net worth: “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா” என சிறுவயதில் பல கஷ்டங்கள் எதிர் கொண்டிருந்தாலும் அதை ஒவ்வொன்றையும் படிக்கல் ஆக்கி, இதைவிட வேறு உயரம் இல்லை என்னும் அளவுக்கு புகழின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறார் அல்லாஹ் ரக்கா  ரகுமான் என்கின்ற ஏ ஆர் ரகுமான்.

மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பொறுமையின் இலக்கணம், தன்னடக்கத்தின் உச்சம் ஆவார்.

இந்தியாவைத் தவிர உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இசை கச்சேரி நடத்தி வரும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் துபாயில் பிரம்மாண்ட இசை கூடம்  ஒன்று உள்ளது.  2008 ஸ்லம் டாக் மில்லியனிர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருது வென்று தமிழனை தலை நிமிரச் செய்தார் ஏ ஆர் ரகுமான்.

Also read: டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

ஆஸ்கார் விருது, தேசிய விருது, கோல்டன் குளோப் விருது என விருதுகளே சளைக்கும் வண்ணம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ஏ ஆர் ரகுமான் உலகம் முழுவதும் பல கோடி மதிப்பில் சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார். அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையே தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஏ ஆர் ரகுமான் சென்னை, மும்பை மற்றும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் என பல இடங்களிலும்  கே KM  மியூசிக் கன்சர்வேட்டரி என்ற பெயரில் ஸ்டூடியோவை நிறுவியுள்ளார்

ஒரு மணி நேர  இசைக்கச்சேரிக்கு 1 முதல் 2 கோடி வரை வாங்கும் ஏ ஆர் ரகுமான் படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் பேசுகிறார். சென்னை, மும்பை என முக்கிய நகரங்களிலும் சொகுசு வீடு வைத்திருக்கும் ஏ ஆர் ரகுமான் இவரின் ஆண்டு வருமானம் மட்டுமே 50 கோடிக்கும் மேல்.

ஜாகுவார், மெர்சிடிஸ், வால்வோ போன்ற முன்னணி நிறுவனங்களின் சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார் ஏ ஆர் ரகுமான். மொத்தமாக பத்து தலைமுறைக்கும் மேல் வாழ்வதற்கு சேர்த்து வைத்துள்ள இசை புயலின் மொத்த சொத்து மதிப்பு 2100 கோடிக்கும் மேல்.

Also read: இளையராஜா இப்படி ஒரு மனுசனா.? மொத்த வாழ்க்கையும் புட்டு புட்டு வைத்த ஏ ஆர் ரகுமான்

Trending News