ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காப்பியடிப்பது புதிதல்ல.. 90ஸ் கிட்ஸ்களின் நினைவில் நீங்காத தேவாவின் விளக்கம்!

தமிழ் சினிமாவின் கானா பாடல்களின் மூலம் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களை இசை அமைத்த பெருமைக்குரியவர் இசையமைப்பாளர் தேவா. இவர் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் .

அதன் பிறகு தமிழில் எக்கச்சக்கமான பாடல்கள் இவர் மெட்டில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலத்து ஆளுகளுக்கு இப்ப இருக்கிற பாடல்களை கேட்டால் ஒன்றுமே புரியவில்லை என சிலர் சொல்லுகின்றனர்.

அவர்கள் மட்டுமல்ல சில இசையமைப்பாளர்களும் இந்த கருத்தை ஒத்துக் கொள்வதும் உண்டு. இதைப்பற்றி இசையமைப்பாளர் தேவாவின் கேட்டபோது, அவர் கூறிய வெளிப்படையான பதில் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதாவது இந்த காலத்து பாடல் புரியவில்லை என்ற கருத்தை இசையமைப்பாளர் தேவா துளிகூட ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. தற்போது வெளியாகும் புது பாடல்கள் காலத்திற்கு ஏற்ப இசை அமைக்கின்றனர். அது நிச்சயம் வெற்றி பெறுகிறது. இந்த காலத்திற்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுப்பதில் தப்பு ஒன்றும் இல்லையே. அவர்களது முயற்சி வெற்றி பெறலாம்.

புதுமையை தான் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். அதைக் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என இந்தக் கருத்திற்கு எதிராக அடித்து பேசியிருக்கிறார். இவருடைய கருத்தை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்று, அதற்கு தங்களுடைய பாசிட்டிவ் கமெண்ட் அடிக்கின்றனர்.

மேலும் தேவா இசையமைத்த பாடல்கள் 90ஸ் கிட்ஸ்களை மட்டுமல்ல இன்றைய தலைமுறைகளையு முணுமுணுக்க செய்யும் செய்யும் செய்யும் வகையில் இருப்பதால் இந்த காலத்தில் புதுப்பொலிவுடன் உருவாகும் பாடல்களுக்கு இவருடைய வரவேற்பு பாராட்டுக்குரியதாகும்.

Trending News