வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தூசி தட்டி ரிலீசுக்கு ரெடி செய்யப்படும் விக்ரமின் படம்.. லேட்டா வந்தாலும் ஒடிடியில் நல்ல விலைக்கு போன வியாபாரம்

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதந்திர இந்தியாவிற்கு முன்னால் நடந்த கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது விக்ரமுக்கு டபுள் ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும்.

விக்ரமுக்கு இப்படி அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் இந்த வேளையில் நீண்ட நாட்கள் ஆக கிடப்பில் போடப்பட்டிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அப்டேட்டும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் இப்போது ரிலீஸ் ஆகும், அப்போது ரிலீஸ் ஆகும் என்று வருடா வருடம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படம் விரைவில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்.

Also Read: மீண்டும் தூசு தட்டப்படும் கௌதம் மேனனின் படம்.. வசமாய் சிக்கி கொண்ட விக்ரம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் துருவ நட்சத்திரம் . இந்த படத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பிரித்விராஜ் சுகுமாரன், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர். ஐந்து வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் வேலைகள் ஆரம்பித்து இருப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த படம் ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் இந்த படத்தில் விக்ரமை இன்னும் கொஞ்சம் இளமையாகவே பார்க்கலாம். படம் என்ன தான் தூசு தட்டப்பட்ட திரைப்படம் என்றாலும் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை வாங்க பிரபல நிறுவனங்கள் நான். நீ என்று போட்டி போட்டு 60, 70 கோடி வரை வியாபாரம் பேசி விட்டன.

Also Read: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பட வாய்ப்பு.. மரண ஹிட் கொடுத்த பின் வாய்ப்பிற்காக கெஞ்சும் சியான்

ஆனால் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் 100 கோடி வரை இந்த படத்தின் வியாபாரத்தை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று படக் குழு திட்டமிட அப்போது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆக இருப்பதால் படத்தின் வியாபார பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்த பிறகு மே மாதத்தில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாளா, செந்தில் வீராசாமி, பி மதன் என ஐந்து தயாரிப்பாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பிரச்சினையே பணமாக தான் இருந்தது. சமீபத்தில் விக்ரம், கௌதம் மேனனை அழைத்து படத்திற்கு தேவையான பணத்தையும் மேலும் 5 நாட்கள் கால்சீட்டையும் தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராவது ஹாரிஸ் ஜெயராஜ் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதியாக இருக்கிறது.

Also Read: 56 வயதிலும் மெனக்கெடும் விக்ரம்.. சியான் வெற்றிக்காக பார்த்து பார்த்து செதுக்கும் ரஞ்சித்

Trending News