திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித் பட இசையமைப்பாளர் போட்ட ஒரே பதிவு.. பதறிப்போன ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். தளபதி விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அண்ணாத்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தன்னுடைய சிறப்பான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இமான், மோனிகா என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் இமான் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் இமான் இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர ரசிகர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

நான் உண்மையில் அவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதையில் செல்வதால் மோனிகாவும், நானும் கடந்த நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.

imman-divorce-twitter-1
imman-divorce-twitter-1

மேலும் நாங்கள் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டோம். எங்கள் நலம்விரும்பிகள், ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனிமைக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி என்று இமான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர். ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கிய இந்த சம்பவம் தற்போது அவரே வெளியிட்டு இருப்பதால் சற்று அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் திரைத்துறையில் இது எல்லாம் சகஜம் என்றாலும் மனதளவில் இமான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரின் நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News