வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

OTT பட பிரியர்களே.. துடிப்பை நிறுத்தும் 6 திகில் படங்கள், இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், மிரள வைக்கும் காட்சிகள், குலைநடுங்க வைக்கும் காட்சிகள் என அதன் சுவாரஸ்யத்தையும் உள்ளடக்கிய திகில் படங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.  

அதுவும் மக்கள் பெரும்பாலும் படங்களை நிம்மதியாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாப்பிட்டு கொண்டே OTT-யில் பார்ப்பதை ஒரு வழக்கமாக கொண்டு வருகின்றனர்.  அப்படி இருக்க, நீங்க திகில் பட பிரியர்களாக இருந்தாள், இந்த படங்களை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.

May The Devil Take You: 2018ம் ஆண்டு ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் நிறைந்த படம் May The Devil Take You. இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ண் நீங்கள் பார்க்கலாம்.  இது ஒரு இந்தோனேசியன் படம்.  Timo Tjahjanto இயக்கிய இந்த படத்தில், Chelsea Islan, Pevita Pearce போன்றோர் நடித்து உருவானது.  நடு நடுங்க வைக்கும் காட்சிகள் இந்த படத்திற்கு அதீதமான மவுசை ஏற்படுத்தி கொடுத்தது.

13B:  விக்ரம் குமார் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் ’13B’. மாதவன், நீது சந்திரா மற்றும் பலரது நடிப்பில் உருவான இந்த படம் சஸ்பென்ஸ், திகில், ஹாரர் நிறைந்தது. புதிதாக வாங்கும் அபார்ட்மெண்ட் வீட்டினுள் குடியேறும் குடும்பம். வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள், டிவியில் கடும் எதிர்கால திகில் எல்லாம் நம் ரத்தத்தையே உறைய வைக்கும்.  90ஸ் கிட்ஸ் அம்மா முந்தானையில் ஒளிந்துகொண்டு பார்த்த திகில் படம் இது.  இந்த படத்தை அமேசான் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Pari: 2018ஆம் ஆண்டு பிரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான ஹாரர், பேண்டஸி, மிரள வைக்கும் திகில் படம் pari. வீட்டில் அடிக்கடி கொடுமைப்படுத்தப்படும் பெண்ணை தீய சக்திகள் கொல்ல முயற்சிக்கும்போது அதில் இருந்து அவரை ஹீரோ எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.  இந்த படத்தை நீங்க அமேசான் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

The Wailing : 2016ம் ஆண்டு ந ஹாங் ஜின் இயக்கத்தில் உருவான படம் ‘The Wailing’. திடீரென கிராமத்தில் நுழையும் மர்ம நபரால் அந்த கிராம மக்கள் அனைவரும் மர்ம நோயால் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த நோய்க்கான காரணம் என்ன? எப்படி குணப்படுத்துகிறார்கள்.. என்பது தான் மீதி கதை.  இந்த படத்தை அமேசான் மற்றும் ஜியோ சினிமாஸ் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

The Medium: 2021ம் ஆண்டு வெளியான ஹார், மிஸ்ட்ரி, திகில் நிறைந்த படம் தான் The Medium.  இது ஒரு கொரியன் படம்.  குலைநடுங்க வைக்கும் திகில் காட்சிகளுடன் மிரட்டும் இந்த ஹாரர் படத்தை அமேசான் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Masooda:  தனியாக மகளுடன் வாழ்ந்து வரும் போது, மகளை ஜின் என்று சொல்லப்படும் தீய சக்தி ஆட்கொள்ள, அதிலிருந்து மகளை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இந்த சஸ்பென்ஸ், திகில் நிறைந்த இந்த ஹாரர் படத்தை ஆஹா தமிழ் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Trending News