பயமாக இருந்தாலும், உடல் எல்லாம் நடுங்கினாலும், ஒளிந்திருந்த படியாகவாது, நாம் சைக்கோ படங்களை பார்ப்போம். டிஸ்டர்ப் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தாலும், அது ஒரு த்ரில்லிங் அனுபவத்தை கொடுப்பதனால், நம்மில் பலர் அந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்போம். அப்படி நொடிக்கு நொடி, பயத்தை ஏற்படுத்தும் படம் தான் செக்டர் 36. இந்த படத்தின் இயக்குநர் அதித்யா நிம்பல்கர்.
சமீபத்தில் வெளியாகி ஓடிடி தளத்தையே மிரளவைத்து, IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்றுள்ள சைக்கோ கிரைம் த்ரில்லர் படம் Sector 36. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 2006-ம் ஆண்டு உலகை உலுக்கிய உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ‘நித்தாரி’ சம்பவம் என்றும் அழைக்கப்படுகிறது.
விக்ராந்த் மாஸ்சி, தீபக் டோபிரியல், தர்ஷன் ஜரிவாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறுவர், சிறுமிகளை குறிவைத்து கொன்ற சைக்கோ கொலையாளியின் கதைதான் ”Sector 36″. ஜுக்கி என்று சொல்லப்படும் ஸ்லம் பகுதிகளில் வாழும் ஏழை குழந்தைகள் திடீரென மாயமாவதும், பிறகு சாக்கடையில் உடல் கிடைப்பதும் வாடிக்கையான நிகழ்வாக மாறுகிறது. போலீஸ் க்கு பெரும் தலைவலியாக இந்த கேஸ் மாறுகிறது.
காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ராம் சரண் பாண்டே என்பவரின் பெண் குழந்தையையும் அந்த சைக்கோ கடத்த முயற்சி செய்கிறான். அதன் பிறகு, போலீஸ் இதில் முழு வீச்சில் இறங்குகிறார். அதற்க்கு பிறகு என்ன ஆகிறது என்பது தான் மீதி கதையாக உள்ளது.
சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாஸ்சியின் நடிப்பு காண்போரை மிரளவைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் சரண் பாண்டே கதாபாத்திரத்தில் தீபக் டோபிரியல் சீரியசான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
படத்தின் சில காட்சிகள் மிகவும் மனதை பாதிக்கும் வகையில் இருப்பதால், குழந்தைகள் இதை பார்க்காமல் இருப்பதே நல்லது. Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படம், இந்தியாவின் டாப் 10 ட்ரெண்டிங் படங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.