1999 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிலுள்ள சட்டத்தினை மிகவும் தத்ரூபமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்த திரைப்படம் தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படம் ஆகும்.
முதல்வன் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியையும் வசூல் சாதனையும் படைத்தது. 100 நாட்களை கடந்த முதல்வன் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார் ,ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் ரசிகர்களிடையே இன்றளவும் மதிப்பு குறையாமல் இருக்கிறது.
இருப்பினும் இத்திரைப்படத்தில் முக்கிய கதைக்களம் “ஒரு நாள் முதல்வர் “- இந்த கதைக்கு யார் பின்னணியாக அமைந்தது என்று தெரியுமா? நடிகர்களின் பல்கலைக்கழகமாக இருப்பவர்” நடிகர் திலகம் சிவாஜிகணேசன்” தான்.
நடிகர் திலகத்திற்கு எந்த ஒரு அறிமுகம் தேவை இல்லை இது நம் நாட்டிற்கு மட்டுமல்ல மற்ற அண்டை நாடுகளுக்கும் இது பொருந்தும். நாம் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன், சிதம்பரம் பிள்ளையாகவும் சிவாஜி கணேசனை பார்த்து இருக்கிறோம்.
கடல் கடந்து முதன்முதலாக வெளிவந்து 1080 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் சிவாஜியின் “பைலட் பிரேம்நாத்” திரைப்படமாகும். இது போன்ற பல ஆச்சரியமூட்டும் மற்றும் தமிழ் சினிமா நடிகர்கள் யாருக்கும் நடைபெறாத நிகழ்வுகளும் நடிகர் திலகத்திற்கு நடந்திருக்கிறது.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிகணேசனுக்கு கிடைத்தது. அதனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு சிவாஜிகணேசனை அழைத்தது.
அந்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற சிவாஜிகணேசனுக்கு பல மரியாதைகள் செய்யப்பட்டது. அதில் முக்கியமாக நார்த் அமெரிக்காவிலுள்ள நயாகராவை “ஒரு நாள் மேயராக” சிவாஜிக்கு பதவி கொடுத்துள்ளனர்., நமக்கு எவ்வளவு பெரிய பெருமை.
அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து முதல்வன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் அவர்கள் அர்ஜுனை ஒரு நாள் முதல்வராக நடிக்க வைத்திருப்பார். நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து உலக சினிமா துறையும் மதிப்பளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.