செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விஜயா மனசை குளிர வைக்க போலி டிராமா போடும் முத்து கூட்டணி.. ரோகினியை வெறுப்பேற்ற சதி பண்ணும் சுருதி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிக்கு எப்படியாவது முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். அதனால் விஜயாவை கைக்குள் போட்டுக்கிட்டு பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். அந்த வகையில் சுருதி மற்றும் மீனா சாதாரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்தால் கூட வேணும் என்று தான் இவர்கள் பண்ணுகிறார்கள் என்று விஜயா மனசை குழப்பி விடுகிறார்.

அப்படித்தான் சுருதி செய்த அனைத்து விஷயங்களுக்கும் பின்னால் மீனாதான் இருந்து தூண்டி விடுகிறார் என்று விஜயா மனதிற்குள் புதைத்து விட்டார். அதன்படி விஜயாவும், ஸ்ருதியின் அம்மாவை நேரில் பார்த்து சுருதியை கண்டித்து வையுங்கள் என்று சொல்லி இருக்கிறார். போதாதற்கு ரோகிணி, ஸ்ருதி அம்மாவிடம் உங்க பொண்ணு இந்த அளவுக்கு பண்ணுவதற்கு முக்கிய காரணம் மீனா தான்.

ரோகினி விஜயாவை டம்மியாக்கிய முத்து கூட்டணி

மீனா பேச்சை கேட்டுக் கொண்டுதான் சுருதி இந்த மாதிரி செய்து அத்தையிடம் திட்டு வாங்குகிறார். இப்படியே போனால் மீனா சொல்வதுதான் சரி என்று ஸ்ருதி நினைத்து உங்கள் அனைவரையும் மதிக்காமல் போய்விடுவார். பிறகு நீங்கள் அனைவரும் மீனாவுக்கு அடிமையாகும் நிலைமை வந்துவிடும் என்று சுருதி அம்மா மனதிற்குள்ளும் மீனாவை பற்றிய தவறான கருத்துக்களை சொல்லிவிட்டார்.

ஏற்கனவே சுருதி அம்மாக்கு மீனா முத்து என்றால் பிடிக்காது. உடனே இதுதான் சான்ஸ் என்று மீனாவை சந்தித்து என் பொண்ண வளைச்சு போட்டு அவகிட்ட இருக்க காசு அனைத்தையும் வாங்கணும் என்று பிளான் பண்ணி தானே நீயும் உன் புருஷனும் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று மீனாவை திட்டி விடுகிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட மீனா, வாய மூடுங்க என் புருஷன பத்தி ஏதாவது தப்பா சொன்னா நடக்கிறதே வேற என்று பதிலடி கொடுக்கிறார்.

உடனே இந்த விஷயங்களை தெரிந்து கொண்ட முத்து வீட்டிற்கு கோபத்துடன் வந்து ரவி மற்றும் விஜயா இருக்கும் பொழுது, எங்க அந்த பல குரல் என்று ஸ்ருதி ரூமுக்கு கோபமாக போகிறார். பின்னாடியே மீனா மற்றும் ரவியும் போகிறார்கள். போனதும் உங்க அம்மா தேவையில்லாமல் மீனாவிடம் சண்டை போட்டு போயிருக்கிறார்கள் இதெல்லாம் நல்லதில்லை என்று சொல்லுகிறார்.

அதற்கு ரவி, அவங்க ஏதாவது சொன்னா அவங்க கிட்ட போய் கேளு, ஏன் சுருதி கிட்ட கத்துகிறாய் என்று சொல்கிறார். முத்து, என்ன திமிரா என்று ரவிடம் சொல்ல, நீ கத்துகிட்டு இருப்ப அதெல்லாம் நான் கேட்டுட்டா இருக்கணும் என்று பஞ்சாயத்து ஆரம்பித்து விட்டது. இதனை வெளியில் இருந்து எட்டிப் பார்க்கும் விஜயா மனசுக்குள் சந்தோஷப்பட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்.

பிறகு ரூம்குள் நடக்கும் விஷயங்கள் என்னவென்றால் இதெல்லாம் விஜயாவை ஏமாற்ற கூட்டணியாக போடும் சதிதான். விஜயா தான் இதற்கு பின்னணி காரணம் என்று தெரிந்து கொண்ட முத்து, ரவி மற்றும் சுருதி மீனா அனைவரும் சேர்ந்து ட்ராமாவை அரங்கேற்றுகிறார்கள். இது தெரியாமல் விஜயா, இவர்களுக்குள் பிரச்சனை வந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

இது எதுவும் தெரியாதா அண்ணாமலை பயந்து போய், முத்துவிடம் என்னாச்சு என்று கேட்கும் பொழுது இதெல்லாம் அம்மா மனதை குளிர வைக்க நாங்கள் அனைவரும் சேர்ந்து போடும் போலி டிராமா. இதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க அப்பா என்று சொல்லி ஒன்றாக இணைந்து விட்டார்கள். கண்டிப்பாக இந்த ஒரு விஷயம் ரோகிணியை வெறுப்பேற்றும் விதமாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News