புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மனோஜின் முதலாளி பதவியை அசால்ட் ஆக தூக்கிய முத்து.. நாளா பக்கமும் அவமானத்தில் சிக்கி சிதறும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சொன்னபடி மனோஜ் ஆரம்பித்த ஷோரூமுக்கு ஓனராக அண்ணாமலையை உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக மொத்த குடும்பத்தையும் முத்து, மனோஜின் ஷோரூமுக்கு கூட்டிட்டு போய்விட்டார். போனதும் முதலாளி தோரணையில் உட்கார்ந்து கொண்டிருந்த மனோஜை எழுந்திருக்க வைத்து அந்த இடத்தில் முத்து, அப்பாவை உட்கார வைத்து விட்டார்.

அத்துடன் அண்ணாமலைக்கும் விஜயாவுக்கும் மாலை போட்டு முதலாளியாக முத்து கௌரவப்படுத்திவிட்டார். அதோடு மட்டும் விடாமல் இனி இந்த கடைக்கு இவர்தான் ஓனர். மனோஜ் ஓனர் கிடையாது அவரும் இனி உங்களை மாதிரி இந்த கடையில் வேலை பார்க்கும் வேலைக்காரன் தான் என்று அவமானப்படுத்தும் அளவிற்கு முத்து சம்பவத்தை செய்து விட்டார்.

இதனை பார்த்து கடுப்பான மனோஜ், முத்துவை திட்ட வரும்பொழுது முத்துவின் நண்பர் செல்வம் ஓனராக இருந்து வேலைக்காரனாக மாறி இருக்கிறாய். ஆனால் முத்து எப்பொழுதுமே ஓனர் தான் என்பதற்கு ஏற்ப அவரிடம் இரண்டு கார் சொந்தமாக இருக்கிறது என்று முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசி விட்டார். உடனே அங்கு கடையில் இருந்த அனைவரும் மனோஜை நக்கலாக பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு கோபப்பட்ட விஜயா, முத்துவின் நண்பரை திட்டி விட்டார். அத்துடன் மனோஜ் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பும் பொழுது சந்தோஷ் சார் வந்து விடுகிறார். உடனே பயந்து போய் மனோஜ், அண்ணாமலையை எழுந்திருக்க சொல்லி அதில் உட்காருவதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனாலும் முத்து விடாமல் தடுத்து விடுகிறார். பிறகு சந்தோஷார் என்ன ஒட்டுமொத்த குடும்பமும் ஷோரூமுக்கு வந்திருக்கிறீர்கள் ஏதாவது விசேஷமா என்று கேட்கிறார்.

அப்பொழுது அண்ணாமலை, இந்த வழியாக வந்தேன் அப்படியே கடையை பார்த்துட்டு போகலாம் என வந்தோம் என்று சொல்லி சமாளிக்கிறார். இதனை நம்பிய சந்தோஷம் அடுத்து வார்த்தை பேச வரும் பொழுது மனோஜ் பொருட்களை கொடுக்கிறேன் என்று டீலர்ஷிப் இடம் இருந்து வாங்கிய பணத்தை ஏமாந்தவர்கள் மொத்த பேரும் வந்து மனோஜிடம் பணத்தை வாங்கிவிட்டு அதற்கான பொருளை அனுப்பவில்லை என்று பிரச்சனை பண்ண வந்து விட்டார்கள்.

உடனே அவர்களை சமாளித்து சந்தோஷார் அனுப்பி வைத்து விட்டார். அதன்பிறகு என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று மனோஜிடம் கேட்க வரும் பொழுது மனோஜ் மறுபடியும் அவரிடம் பொய் சொல்வதற்கு முயற்சி எடுக்கிறார். ஆனால் முத்து, மனோஜ் அந்த பணத்தை வைத்து தான் ECR இல் வீடு வாங்குவதற்கு அட்வான்ஸ் ஆக 30 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தார்.

ஆனால் அந்தப் பணத்தையும் ஒருத்தர் ஏமாத்திட்டு போய்விட்டார் என எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். இதனை கேட்டதும் கோபப்பட்ட சந்தோஷ் சார், ஒரு பிசினஸ் இப்பதான் ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்குள் இவ்வளவு பெரிய வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவது நியாயமே இல்லை. நாங்களே பத்து வருஷமாக இந்த ஃபீல்டுல இருக்கும், ஆனால் இப்பொழுது வரை ஒரு அப்பார்ட்மெண்டில் தான் இருந்து வருகிறோம்.

கொஞ்சம் பணத்தைப் பார்த்ததும் தேவையில்லாமல் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது. இப்ப நினைச்சா கூட என்னால உங்க டீலர்ஷிப்பை ரத்து பண்ண முடியும். ஆனால் முத்து என்னிடம் சொன்ன உண்மைக்காகவும் உங்க குடும்பத்திற்காகவும் மட்டும்தான் நான் டீலர்ஷிப்பை ரத்து பண்ணாமல் போகிறேன். கூடிய சீக்கிரத்தில் எனக்கு பணத்தை அனுப்பி விட்டால் அதற்கான பொருட்களை அனுப்பி விட்டு விடுவேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

ஒரே நேரத்தில் எல்லாமே கைவிட்டுப் போன மாதிரி மனோஜ் 30 லட்சம் ரூபாயும் ஏமாந்து தற்போது கடையும் இல்லாமல் மொத்தமாக அவமானப்பட்டு நிற்கிறார். அத்துடன் இந்த கோபத்தை எல்லாம் வீட்டிற்கு வந்த விஜயா, ரோகினிடம் காட்டி சீக்கிரமாவே உங்க அப்பாவிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்திடு. அப்பொழுது தான் மனோஜ் மறுபடியும் ஓனராக இருப்பான் என்று கரராக பேசி விடுகிறார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மனோஜ் மற்றும் ரோகினி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி கொடுக்கும் ஐடியா என்னவென்றால் கூடிய சீக்கிரத்தில் நம்மிடம் பணத்தை ஆட்டை போட்டுட்டு போன கதிரை கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற வேண்டும். அந்த பணத்தை உங்க அப்பாவிடம் கொடுத்து பிரச்சினையை சரி செய்து விடலாம் என சொல்கிறார்.

அதற்கு மனோஜ், அப்படி எல்லாம் பண்ண முடியாது ஏனென்றால் அந்த 30 லட்சம் பணம் டீலர்ஷிப்பிடம் நம் வாங்கியது. அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தால் தான் கடையை ரன் பண்ண முடியும் என்று சொல்லிவிட்டார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ரோகிணி மற்றும் மனோஜ் சிக்கி தவிக்கிறார்கள்.

Trending News