வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நண்பர்களுக்காக முத்து எடுக்கப் போக முடிவு.. மீனாவிடம் உண்மைய சொல்ல போகும் நண்பன்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து குடும்பத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக அவமானப்பட்டு வருகிறார். அதாவது முத்துவின் அப்பாவிற்காக மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து உதவிய நண்பனால் கார்க் டியூ கட்ட முடியாமல் போய்விட்டது.

இதனை வந்து கேட்டு அராஜகம் பண்ணிய மீனாவின் தம்பி மற்றும் சிட், முத்திவிடம் நல்லா அடி வாங்கி விட்டார்கள். இதனால் கோபத்தில் சிட்டி கும்பல், கார் செட்டுக்கு வந்து முத்துவின் நண்பர்களிடம் நாளைக்கு ஒரு நாள் தான் டைம் மொத்த பணத்தையும் வட்டியுடன் சேர்ந்து கொடுக்க வேண்டும் என்று கரராக பேசி விட்டார்.

இதனை கேட்ட முத்து, சிட்டி இடம் உனக்கும் எனக்கும் தான் பிரச்சனை. தைரியம் இருந்தால் என்னுடன் மோது என்று கூறுகிறார். அதற்கு சிட்டி நான் பண்ணியதெல்லாம் தவறுதான் என்று என் காலில் விழுந்து மன்னிப்பு கேளு உன் நண்பர்கள் பக்கம் நான் வரமாட்டேன் என்று முத்துவை அசிங்கப்படுத்தி விடுகிறார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

இதனால் கொந்தளித்துப் போன முத்து அவருடைய நண்பர்களுக்காக ஒரு முடிவு எடுத்து விட்டார். அதாவது தனக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது முதல் ஆளாக வந்து உதவிய நண்பனுக்கு தற்பொழுது இக்கட்டான சூழ்நிலை என்பதால் அவருடைய சொந்த காரை விற்பதற்கு முடிவு பண்ணி விட்டார்.

அதனால் அவருடைய காரை விற்று மூன்று லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டார். இதற்கிடையில் சிட்டி அவருடைய ரவுடி கும்பலை கூட்டிட்டு வந்து கார் செட்டில் பிரச்சனை பண்ணுகிறார். அந்த நேரத்தில் முத்து வந்து பணத்தை சிட்டி இடம் கொடுக்கிறார். அத்துடன் ஆதாரத்துக்காக வீடியோவையும் எடுக்க சொல்கிறார். பிறகு நண்பர்களை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி விடுகிறார்.

அடுத்து முத்துவின் நண்பர் உனக்கு ஏது இவ்வளவு பணம் என்று கேட்கிறார். அப்பொழுது தான் தெரிய வருகிறது முத்து அவருடைய காரை விற்று கடனை அடைத்திருக்கிறார் என்று. அடுத்ததாக முத்துவிடம் மீனாவும் கோபத்தில் இருக்கிறார். தன் தம்பி கையே உடைத்து விட்டார் என்பதால். மேலும் முத்து எது செய்தாலும் அதில் ஒரு விஷயம் இருக்கும் என்பதால் மீனா, முத்துவின் நண்பரை தேடி போகிறார். அந்த வகையில் மீனாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

Trending News