வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குசும்புக்கார முத்து கொஞ்சம் ஓவராகத்தான் போறாரு.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரோகிணியை பந்தாடும் விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனசுல பட்டதை எதார்த்தமாக பேசுகிறேன் என்ற நினைப்பில் முத்து கொஞ்சம் ஓவராக தான் குசும்புத்தனத்தை காட்டி வருகிறார். அதுவும் கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரவியை ஓடிப்போய் கல்யாணம் பண்ணவன் என்றும், மனோஜை பார்த்து பணத்தை எடுத்துட்டு திருட்டு வேலையை பார்த்தவன் தானா என்று அடிக்கடி குத்தலாக பேசி காட்டுகிறார்.

இது என்ன தான் உண்மையாக இருந்தாலும் அடிக்கடி இதையே சொல்லி அங்கு இருப்பவர்களை காயப்படுத்துவது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதுவும் ரவி, தன் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து முத்துக்கும் மீனாக்கும் சப்போர்ட்டாக பல இடங்களில் பேசி அன்புக்காக ஏங்கி வருகிறார். அவரை அடிக்கடி நோண்டுவது ஸ்ருதியை இன்னும் அதிகமாக கடுப்பேத்துகிறது.

அத்துடன் ரோகிணி, மனோஜுக்காக வாங்கிட்டு வந்த சாப்பாட்டை தெரியாத்தனமாக முத்து சாப்பிட்டு விடுகிறார். மீனாதான் நமக்காக வாங்கிட்டு வந்திருப்பாள் என்ற நினைப்பில் சாப்பிடுகிறார். ஆனால் மீனா நான் வாங்கவில்லை ரோகிணி வாங்கிட்டு வந்தாங்க என்று சொன்னதும், பரவாயில்லை என்று சாப்பிடுகிறார். இதைப் பார்த்த ரோகினி ஆசை ஆசையா மனோஜ்க்கு வாங்கிட்டு வந்ததை இப்படி பண்ணிட்டாரே என்ற ஒரு கோபத்துடன் முறைக்கிறார்.

Also read: கதிரிடம் செண்டிமெண்டாக பேசி லாக் செய்த கோமதி.. ருத்ரதாண்டவத்தை ஆடப்போகும் பாண்டியன்

அது மட்டும் இல்லாமல் விஜயா இதுதான் சான்ஸ் என்று முத்துவை திட்டுகிறார். மீனா என்னைக்கு உனக்கு கடையில் வாங்கிட்டு வந்து கொடுத்து இருக்கிறாள், இதெல்லாம் தெரிந்தும் வேண்டும் என்று தான் முத்து இந்த மாதிரி பண்ணுகிறார் என்று விஜயா சொல்கிறார். கடைசியில் இது ஒரு பஞ்சாயத்தாக போய் முடிகிறது.

இதற்கிடையில் ரோகிணியை பார்க்கும் பொழுதெல்லாம் விஜயா நகையும் பணத்தையும் கேட்டு ரொம்பவே டார்ச்சர் கொடுக்கிறார். இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ரோகிணி. அடுத்தபடியாக மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலில் விஜயா மற்றும் அவருடைய தோழி சாப்பிடுவதற்காக போகிறார்கள்.

இவர்களை பார்த்ததும் மனோஜ் போய் மறைந்து கொள்கிறார். ஆனால் எப்படியும் மனோஜ் விஜயா கண்ணில் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிறகு இந்த ஒரு விஷயமும் விஜயாக்கும் மனோஜ்க்கு மட்டும் கமுக்கமாக இருக்கப் போகிறது. அடுத்து மனோஜ் பற்றி விஷயங்கள் குடும்பத்திற்கு தெரிய வரும் பொழுது மறுபடியும் விஜயா மாட்டிக்கொண்டு முழிக்கப் போகிறார்.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்விக் கேட்ட ஆதிரை.. அடிமைகள் செய்த காரியத்தால் அரண்டு போன அண்ணன்

Trending News