வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரோகினி போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய முத்து.. மீனா செய்த காரியத்தால் விஜயாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, ஜீவாவை ரோகிணி வைத்திருக்கும் பார்லருக்கு கூட்டிட்டு போகிறார். உள்ளே போன ஜீவாவை ரோகிணி பார்த்ததும், இவள் மனோஜை ஏமாற்றிவிட்டு 27 லட்ச ரூபாய் எடுத்துட்டுப் போன ஜீவா தானே என்று உறுதிப்படுத்தி விட்டார்.

அதன் பிறகு மனோஜ்க்கு போன் பண்ணி நீ உடனே பார்லருக்கு வா. இங்கே ஜீவா வந்திருக்கிறார் என்ற தகவலை சொல்லி விடுகிறார். மனோஜ் வரும் வரை ரோகினிக்கு எதுவும் தெரியாது போல் ஜீவாக்கு மேக்கப் பண்ண ஆரம்பிக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் உள்ளே நுழைந்து ஜீவாவை பார்த்ததும் ஜீவாவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பிறகு ரோகிணியும் மனோஜும் சேர்ந்து ஜீவாவை மிரட்டி பணத்தை கேட்கிறார்கள். அதற்கு ஜீவா என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய நிலையில் போலீஸ்க்கு தகவலை கொடுத்து அவர்களை வர வைக்கிறார்கள்.

தோல்வியில் முடியும் ரோகிணியின் திட்டம்

அதன்படி போலீஸ் வந்து ஜீவாவை விசாரிப்பதற்காக ரோகினி மற்றும் மனோஜையும் சேர்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார். அங்கு போய் விசாரணை நடக்கும் பொழுது எதிர்ச்சியாக மீனாவும் அங்கே வந்து விடுகிறார். எதற்காக என்றால் நடமாடும் பூக்கடையான பைக்கை எடுத்து போகும் போது நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விடுகிறார்.

இதனால் போலீஸ், மீனாவின் பைக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வந்து விடுகிறார்கள். மீனா இந்த தகவலை முத்துவுக்கு போன் பண்ணி சொல்லி முத்துவையும் வர சொல்கிறார். ஆக மொத்தத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஜீவாவிடம் 27 லட்ச ரூபாய் பணத்தை கேட்டு ரோகிணி, மனோஜ் விசாரணை பண்ணுகிறார்கள்.

வெளியில் முத்து மற்றும் மீனாவும் பைக்கை கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து உள்ளே நடக்கிற விஷயம் முத்துவின் பார்வைக்கு வரப்போகிறது. அதன்படி அந்த ஜீவா யார் என்ற உண்மையும் முத்துவிற்கு தெரியப் போகிறது. இதனை தொடர்ந்து விசாரணை நடக்கும் பொழுது பணம் கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இதனால் இவர்களை ஏமாற்றி ரோகினி பணத்தை ஆட்டைய போட்டு மனோஜை கூட்டிட்டு கனடாவிற்கு போக வேண்டும் என்று போட்ட கணக்கை தவடு பொடியாக்கும் வகையில் முத்து, ஜீவாவிடம் பேசி காரியத்தை சாதிக்கப் போகிறார். கடைசியில் ஜீவாவிடம் இருக்கும் பணம் அண்ணாமலை மற்றும் விஜயாவிற்கு போய் சேரப்போகிறது. இதற்கு ஒரு வகையில் மீனாவும் தான் காரணம். எப்படி பார்த்தாலும் விஜயாவிற்கு மீனா மூலம் தான் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கிறது.

Trending News