வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரோகினியின் மாமாவுக்கு ஊத்தி கொடுத்து உண்மையை வாங்க போகும் முத்து.. வடிகட்டின முட்டாளாக இருக்கும் விஜயா

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து தான் டிஆர்பி கிங் என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும் பேச்சும் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது. அத்துடன் தன்னை நம்பி வந்த மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், இருக்கிறத வச்சு சந்தோஷமாக வாழும் ஒரு அன்பான கணவன் மனைவியாகவும் மீனா முத்து இல்லற வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது.

இதனை அடுத்து ரோகினியின் மாமாவாக உள்ளே நுழைந்திருக்கும் பிரவுன் மணி பண்ற விஷயங்கள் அங்கே இருக்கும் அனைவருக்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர் மலேசியாவில் இருந்து வந்த மாதிரி இல்லை பணக்கார ஆளாகவும் தெரியவில்லை என்ற சந்தேகம் முத்துவிற்கு ஏற்பட்டு விட்டது.

அதனால் இவரை வைத்து ரோகிணியின் உண்மையான முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று முத்து அவருடைய நண்பரிடம் சொல்கிறார். உடனே அவர் நண்பர் ஒரு ஐடியா கொடுக்கிறார். மலேசியாவில் இருந்து வந்திருக்கும் அவருக்கு கண்டிப்பாக குடிப்பதற்கு அடிமையாக தான் இருப்பார். அதனால் அவரை ஈசியாக கவுத்து விடலாம் என்று சொல்கிறார்.

Also read: கதிர் தர்ஷினியின் நிலைமைக்கு காரணமான கருப்பு ஆடு.. குணசேகரன் கூட உறவாடி கெடுக்க போகும் மெய்யப்பன்

அதற்கு ஏற்ற மாதிரி முத்துவும் நண்பரும் கள்ளு குடிப்பதற்கு பிரவுன் பணியை கூட்டிட்டு போகலாம் என்று ஒரு பிளான் போடுகிறார்கள். இதற்கிடையில் கிராமத்திற்கு போன பொங்கல் விழாவை சிறப்பித்து முடிக்கலாம் என்ற காரணத்திற்காக மூன்று மருமகள் ஒற்றுமையாக இருந்து பொங்கல் விடுகிறார்கள்.

இதனைப் பார்த்து விஜயா பொறாமையில் பொங்குகிறார். எங்கே இந்த மூன்று மருமகளும் ஒன்று சேர்ந்து விட்டால் நமக்கு எதிராக மாறி விடுவார்கள் என்ற பயத்தில் மனதிற்குள்ளே புலம்பி தவிக்கிறார். அடுத்து முத்து பிளான் பண்ண படி ரோகினி மாமாவை வெளியே அழைத்துப் போய் குடிப்பதற்கு ஊத்திக் கொடுக்கப் போகிறார்.

சும்மாவே வாய்க்கு வந்தபடி உளறுவார் பிரவுன் மணி. அதனால் மது அருந்து பிறகு உண்மையிலேயே அனைத்தையும் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ரோகினியின் உண்மையான முகத்திரை வெளிய வர போகிறது. ஆனால் இது கொஞ்சம் கூட தெரியாமல் ரோகிணியை கண்முடித்தனமாக நம்பி வடிகட்டின முட்டாளாக இருக்கிறார் விஜயா.

Also read: கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க மனோஜ்.. வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய முத்து, திருட்டு முழி முழிக்கும் விஜயா

Trending News