வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மறுபடியும் மீனாவிற்கு தாலி கட்டி கலாட்டா பண்ணும் முத்து.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனோஜ்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துக்கும் மீனாவுக்கும் ஆரம்பத்தில் பிடிக்காமல் திருமணம் நடந்தாலும் தற்போது மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிவிட்டார்கள். அதன் அடையாளமாக தான் முத்து தாலி வாங்கிட்டு வந்ததும் மீனா அதை சரியாக பிளான் பண்ணி இரண்டு பேரும் மறுபடியும் திருமணம் செய்துக்கலாம் என்று கோவிலில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முத்து இந்த கல்யாணத்தில் முழு சம்மதத்துடன் நான் மீனாவிற்கு மறுபடியும் தாலி கட்டுகிறேன் என்று கோவிலில் வைத்து மாலை மாற்றி முறைப்படி திருமணத்தை பண்ணிக் கொண்டார்கள். அத்துடன் வீட்டுக்கு வந்ததும் ஆரத்தி எடுத்து புதுசாக கல்யாணம் பண்ணிட்டு வரவங்க என்னெல்லாம் சடங்கு சம்பிரதாயம் பண்ணனுமோ அதை எல்லாம் மீனா செய்தார்.

அடுத்து மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மீனா மற்றும் முத்து இருவரும் எந்த அளவிற்கு மனம் ஒத்து தம்பதிகளாக வாழ்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஒவ்வொருவரும் அவர்களுடைய அன்பை பரிமாறி கொண்டார்கள். இந்த விஷயங்களை பார்க்கும் பொழுது நாடகமாக இருந்தாலும் இதை பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Also read: விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.. ரோகிணி போல் பொய் பித்தலாட்டம் பண்ணும் மனோஜ்

ஆனாலும் புது மாப்பிள்ளைக்கு லொள்ளு ரொம்ப ஜாஸ்தி என்பதற்கு ஏற்ப முத்து, இப்பொழுது எங்களுக்கு கல்யாணம் முடிந்து விட்டது அடுத்து என்ன நடக்கணுமோ அதற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று அப்பாவிடம் சொல்கிறார். அதாவது முதல் ராத்திரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை சொல்கிறார். ஆக மொத்தத்தில் குடும்பத்திலும் ஒரு கலாட்டாவை உண்டாக்கி விட்டார்.

பிறகு வெட்கப்பட்டு மீனா முத்துவை கூட்டிட்டு போய்விட்டார். பிறகு இவர்கள் ரொமான்ஸ்க்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாத அளவிற்கு இரண்டு பேரும் சந்தோஷமாக பேசிக் கொள்கிறார்கள். இதில் ரோகினி கடுப்பாகி விஜயாவிடம் இதெல்லாம் என்ன கூத்து என்று கேட்கிறார். உடனே விஜயா இது தான் சான்ஸ் என்று நீயும் உன்னுடைய அப்பாவிடம் சொல்லி சீக்கிரத்தில் நகை அனைத்தையும் வாங்கி போடு என்று ஒரு குண்டை தூக்கி போட்டு விடுகிறார்.

இது என்னடா வம்பா இருக்கு என்பதற்கு ஏற்ப ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ் தூங்கும்பொழுது தூக்கத்தில் அவருக்கு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கும் ஞாபகம் வந்து விடுகிறது. உடனே தோசை, இட்லி, பூரி என்று சாப்பாட்டின் மொத்த மெனுவையும் சொல்லி உளறி விடுகிறார். இதை கேட்ட ரோகிணி மனோஜை எழுப்பி இதெல்லாம் என்னது என்று சந்தேகப்பட்டு கேட்கிறார்.

Also read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. கதிரின் மாற்றத்தால் முன்னுக்கு வந்த எதிர்நீச்சல்

Trending News