செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

அல்வா கொடுத்து உண்மையை தெரிந்து கொண்ட முத்து மீனா.. ரோகிணியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் நேரம் வந்தாச்சு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் 30 லட்ச ரூபாய் ஏமாந்து போன கதிர் பற்றிய வீடியோ போலீஸ் கையில் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தை சீதா கோவிலில் இருந்து பார்த்துவிட்டு மீனாவுக்கு போன் பண்ணி தகவல் சொல்கிறார். உடனே மீனா, அப்படி என்றால் நீயும் அந்த கோவில் அதிகாரியிடம் போய் வீடியோ கிடைக்குமா என்று கேட்டு பாரு என்று சொல்கிறார்.

அதன்படி சீதா, கோவில் அதிகாரியிடம் பேசி அந்த வீடியோவை வாங்கி விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா அந்த கதிரை பற்றி கண்டுபிடிப்பதற்கு போலீஸ் மூலம் ரோகிணி மனோஜ் வீடியோவை வாங்கி விட்டார்கள். நானும் அந்த வீடியோவை சீதாவிடம் வாங்கி வைக்க சொல்லி விட்டேன் என சொல்கிறார். அடுத்ததாக முத்து, மலேசியா தம்பதிகள் கிளம்பி போய் விட்டார்கள்.

ஆனால் அவர்கள் போகும்பொழுது அவருக்குத் தெரிந்த சொந்தக்காரர் ஜெயிலில் அதிகாரியாக இருக்கிறார் என்ற தகவலை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ரோகிணி அப்பாவை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று முத்து, மனோஜிடம் சொல்கிறார். உடனே மனோஜ் நல்ல விஷயமாக இருக்கிறதே என்று சொல்லிய நிலையில் ரோகிணி வந்து எங்க விஷயத்துல நீங்க ஏன் தலையிடுறீங்க என்று கோபமாக பேசியதும் மனோஜும் ஆமாம் உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் நீ ஏன் விசாரிக்கிறாய் என்று கேட்டு அப்படியே அந்தர் பல்டி அடித்து விடுகிறார்.

முத்து இவனையும் திருத்த முடியாது பார்லர் அம்மாவின் ரகசியத்தையும் கண்டுபிடிக்க முடியாது என்று மீனாவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார். அதற்கு மீனா, ரோகினிடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. ஏனென்றால் அவங்க அப்பா கஷ்டத்தில் இருக்கிறார் அவரை காப்பாற்றுவதற்கு தெரிந்த ஒரு நபர் இருக்கிறார் என்று சொன்னால் அதற்கு சந்தோஷப்பட்டு நன்றி தான சொல்ல வேண்டும். இவங்க ஏன் கோபமாக பேசுகிறார்கள் இதில் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று மீனா, முத்துவிடம் கூறுகிறார்.

உடனே முத்துவும் எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. இதைப் பற்றி நம் ஆலோசிப்போம் என்று சொல்லிய நிலையில் ரெண்டு பேரும் சிந்தித்துப் பார்த்ததும் ரோகிணியை பற்றி தெரிந்து கொள்ள பார்வதி அத்தை கிட்ட போயி பேசலாம் என்று முடிவு பண்ணி பார்வதி வீட்டிற்கு போகிறார்கள். போகும் பொழுது பார்வதி அத்தைக்கு பிடித்த அல்வாவை வாங்கி கொடுத்து எதிர்மறையாக சில விஷயங்களை பேசி ரோகிணி அப்பாவை பற்றி விசாரிக்கிறார்கள்.

அதற்குப் பார்வதி, எனக்கு ரோகிணி அப்பாவை பற்றி எதுவும் தெரியாது. இரண்டு மூன்று தடவை வீட்டிற்கு வந்து எனக்கு மசாஜ் பண்ணி வந்த பொழுது பழக்கம் ஏற்பட்டதால் உங்க அம்மாவும் பேச ஆரம்பித்தார். அப்படி உங்க அம்மா குடும்பத்தை பற்றி கேட்டபொழுது ரோகிணி எங்க அப்பா மலேசியாவில் இருக்கிறார் என்று சொன்னார் என பார்வதி, முத்து மீனாவிடம் சொல்லிவிடுகிறார்.

இதற்கு அடுத்தபடியாக இன்னும் ரோகிணி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வித்தியாவிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணிய நிலையில் மீனா, வித்யா வீட்டிற்கு போகிறார். அங்கே சில கேள்விகளை மீனா கேட்ட நிலையில் வித்யா ரோகிணி பற்றிய விஷயங்களை முரண்பாடாக சொல்ல ஆரம்பித்து விட்டார். அப்பொழுது மீனாவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிவிட்டது.

உடனே உஷராகிய வித்யா, மீனாவிடம் ஏதோ சொல்லி சமாளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். பிறகு வித்யா, ரோகினிக்கு போன் பண்ணி மீனா வந்து உன்னை பற்றி கேள்வி கேட்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் உஷாராக இருந்துக்கோ என்று வார்னிங் கொடுக்கிறார். இதற்கு அடுத்ததாக முத்து மற்றும் மீனா ஒன்றாக ஒரு இடத்தில் கூடி ரோகிணி மலேசியா வீட்டு பொண்ணு இல்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டார்கள்.

ஆனால் இதை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று முத்து டிராமா பண்ணி மலேசியாவுக்கு போகலாம் என்ற ஒரு விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். ஆனால் இதை தடுக்க வேண்டும் என்று மனோஜ் மூலம் ரோகிணி பிளான் பண்ணிவிட்டார். இருந்தாலும் இனி ரோகிணி என்ன பண்ணாலும் தப்பிக்க முடியாது என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனா உஷாராகி விஜயாவிடம் நைசாக பேசி மலேசியாவுக்கு போவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்கள். அந்த வகையில் ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவரும் நேரம் வந்தாச்சு.

Trending News