சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

ஆர்வக்கோளாறு ரவியால் சுருதியை தேடி அலையும் முத்துமீனா.. மனோஜை சமாளிக்க ரோகிணி ஆடிய பேயாட்டம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிக்கு பேய் பிடித்திருக்கிறது அதை விரட்ட வேண்டும் என்றால் கம்பால் அடித்தால் தான் சரியாகும் என்று மனோஜ் மறுபடியும் கம்பு எடுத்து அடிக்கப் போய்விட்டார். இதனால் ரோகிணி எப்படியாவது மனோஜிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக உடம்பில் பேய் வந்தது போல் பேயாட்டம் ஆடி மனோஜை மறுபடியும் பயமுறுத்தி விட்டார்.

பயத்தில் இருக்கும் மனோஜிடம் என்னுடைய உடம்பிலிருந்து எங்க அப்பாவுடைய ஆவி போய்விட்டது. அந்த வைப்ரேஷன் எனக்கு தெரிகிறது. இனி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிய நிலையில் மனோஜும் ரோகிணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கம்பை தூர போட்டு சமாதானம் ஆகிவிட்டார். இதனை அடுத்து ரவி வேலை பார்க்கும் ஹோட்டலில் நீத்து கீழே விழுந்து விடுகிறார்.

இதனை பார்த்த ரவி, அடிபட்டிருக்கும் நீத்துவை கை தாங்கலாக தூக்கிட்டு வருகிறார். அந்த நேரத்தில் ரவியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக ஹோட்டலில் சுருதி நுழைந்து விடுகிறார். ஸ்ருதியை பார்க்காமல் ரவி நீத்துவைத் தூக்கிட்டு வந்த வேலையில் சுருதி இவர்களை பார்த்து விடுகிறார். அப்பொழுது ரவி, நீத்து கீழே விழுதுட்டாங்க என்று சொல்லிய நிலையில் சுருதி காது கொடுத்து கேட்காமல் கோபப்பட்டு ஆட்டோவில் ஏறி போய்விடுகிறார்.

ஆனால் ஸ்ருதி கோபமாக போகிறார் என்று தெரிந்தும் ரவி, ஸ்ருதியை சமாளிச்சுக்கிறது பெரிய விஷயம் இல்லை. அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் இப்பொழுது உங்களை நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறேன் என்று மறுபடியும் நீத்துவை கூட்டிட்டு ரவி ஆஸ்பத்திரிக்கு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக எல்லோரும் ரவி மற்றும் ஸ்ருதியின் ஒரு வருஷ கல்யாணம் நாளை கொண்டாடுவதற்காக கிளம்பி விடுகிறார்கள்.

அப்பொழுது வீட்டிற்கு வந்த ரவி, ஸ்ருதியை காணும் என்று டென்ஷனாக இருக்கிறார். உடனே விஜயா ஸ்ருதி எங்க என்று கேட்ட நிலையில் ரவி, சுருதி டப்பிங் வாய்ஸ் கொடுப்பதற்கு போயிருக்கிறார், அதனால் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். நீங்கள் எல்லாம் மண்டபத்துக்கு போயிருங்க நானும் வந்து விடுகிறேன் என்று ரவி சொல்லி சமாளிக்கிறார்.

ரவி ஏதோ பொய் சொல்கிறார் என்று தெரிந்து கொண்ட முத்து மற்றும் மீனா, ரவியிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை சொல்லிய நிலையில் முத்து உன்னைப் பற்றி தெரிந்தும் எதற்காக பல குரல் கோவப்படணும் என்று கேட்கிறார். அதற்கு மீனா, அவங்க பக்கத்துல எதாவது நியாயம் இருக்கும் அதை கேட்டா தான் புரியும் என்று சொல்கிறார்.

உடனே முத்து சரி டென்ஷன் ஆகாத நீயும் மண்டபத்துக்கு கிளம்பி அங்கு இருப்பவர்களை சமாளித்துக் கொண்டு இரு. நானும் மீனாவும் எப்படியாவது பல குரலை கண்டுபிடித்து சமாதானப்படுத்தி விட்டு மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று சொல்லி சுருதியை எல்லா பக்கமும் தேடுகிறார்கள். ஆனால் மண்டபத்தில் இருக்கும் ரவியிடம் அங்கு வருபவர்கள் அனைவரும் சுருதி எங்கே என கேட்கிறார்கள்.

கடைசியில் சமாளிக்க முடியாமல் ரவி, முத்துவுக்கு போன் பண்ணி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு முத்து எங்கே தெரியும் பல குரலை கண்டுபிடிக்க முடியவில்லை நீ கொஞ்சம் சமாளி நான் பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். ஆனால் ஸ்ருதியை காணவில்லை என்றதும் ஸ்ருதியின் அம்மா அப்பா டென்ஷன் ஆகி ஏதாவது பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் கடைசியில் ஸ்ருதிய சமாதானப்படுத்தி முத்து மற்றும் மீனா மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விடுவார்கள்.

Trending News