ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டாம் அண்ட் ஜெரியாக மாறி கொஞ்சும் முத்து மீனா.. வயிற்றெரிச்சலில் பொங்க போகும் ரோகிணி விஜயா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் என்னதான் முத்துவிற்கும் மீனாவிற்கும் தற்போது மணக்கசப்பு இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் காதல் ரொம்பவே ஆழமானது. அந்த வகையில் அடிக்கடி மீனாவை பார்க்கும் பொழுது முத்து கொஞ்சம் ஜர்க்ஆகி விடுகிறார். அதே நேரத்தில் மற்றவர்களிடம் முத்து கோவப்பட்டு பேசினாலும் மீனாவை கண்டால் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார்.

அடுத்ததாக மீனாவிற்கு வந்திருக்கும் ஆர்டர் மூலம் பெரிய தொகை வரப்போகிறது. இதனால் முத்துவை கூப்பிட்டு பூ மார்க்கெட்டில் பேய் மாலை கட்டுவதற்கு அனைத்து பொருட்களையும் வாங்கப் போகிறார். போன இடத்தில் நோ பார்க்கிங் விஷயத்தில் முத்து மாட்டிக் கொள்கிறார். இதற்கு மீனா வக்காலத்து வாங்கி டிராபிக் போலீஸ் இடம் பேசுகிறார்.

இருந்தாலும் கடைசியில் 500 ரூபாய் அபராதம் கட்டும் விதமாக அமைந்து விடுகிறது. ஆனாலும் மீனா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முத்துவை டைவர்ட் பண்ணி யதார்த்தமான அன்பை காட்டி மாற்றப் பார்க்கிறார். அப்பொழுது மீனாவின் தங்கையும் அதே ஆட்டோவில் வருவதால் முத்துவையும் மீனவையும் வச்சு கலாய்த்து பேசுகிறார்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

தற்போது இவர்களை பார்க்கும் பொழுது டாம் அண்ட் ஜெரியாக இருந்தாலும் காதல் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ரசிக்கும்படியாக இருக்கிறது. அதே நேரத்தில் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ண ரவி சுருதி அடிக்கடி சண்டை போடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அதிலும் சுருதி கொஞ்சம் ஓவராக தான் பேசி ஆட்டம் போடுகிறார். தற்போது பணத்திற்கு மனோஜ் மற்றும் ரோகினி திண்டாடி வரும் நேரத்தில் மீனாவுக்கு பணம் கொட்டு கொட்டுன்னு கொட்ட போகிறது. அந்த பணத்தை வைத்து முத்துவிற்கு ஒரு காரை வாங்கி கொடுக்கப் போகிறார். ஆனால் முத்து கார் வேண்டாம் உனக்கு தேவையான அனைத்து நகைகளையும் வாங்கிக்கொள் என்று சொல்லப் போகிறார்.

ஆனால் மீனா எனக்கு நகை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் அதை நீங்கள் சம்பாதித்து வாங்கி கொடுங்கள். இது உங்களுக்காக நான் பண்ணற விஷயம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று முத்துவிற்காக கார் வாங்கி கொடுக்க போகிறார். ஒரு உண்மையான கணவன் மனைவி எந்த மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கை நகர்ந்து வருகிறது.

Also read: ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

Trending News