சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரோகினிக்கு அடுத்த பாயாசத்தை போட்ட முத்து, விஜயா கொடுக்கும் டார்ச்சர்.. மீனா கையில் கிடைக்கும் போன்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மலேசியாவில் இருந்து வந்த வயதான தம்பதிகளை பிக்கப் பண்ணிட்டு முத்து கோவிலுக்கு கூட்டிட்டு போகிறார். அங்கே அவர்களுக்கு பிறந்தநாள் என்பதால் மீனாவிடம் சொல்லி அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலில் பண்ண சொல்லி விட்டார். மீனாவும் முத்து சொன்னபடி அந்த கோவிலில் தம்பதிகளுக்கு நடக்க வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய பேரானந்தமாக ஆகிவிட்டது. அதே நேரத்தில் அந்த கோவிலுக்கு ரோகினி அனுப்பிய காரணத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக சிட்டி வந்து விட்டார். சிட்டி வந்ததும் கோவிலில் இருக்கும் அதிகாரியை சந்தித்து சிசிடிவி கேமிராவின் வீடியோவை கேட்கிறார். ஆனால் அந்த அதிகாரி அப்படி எல்லாம் யாரிடமும் கொடுத்திட முடியாது.

போலீஸ் தவிர நாங்கள் வேறு யாரிடமும் கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள். உடனே சிட்டி, மீனா மற்றும் சத்யாவின் பெயரைச் சொல்லி எங்களுக்கு தெரிந்தவர்கள் தான் என்று கேட்டு பார்க்கிறார். ஆனாலும் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். உடனே சிட்டி அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். பிறகு இவர் வந்து கேட்டுட்டு போன விஷயத்தை அதிகாரி மீனாவிடம் சொல்கிறார்.

மீனா அதை முத்துவிடம் சொல்லிய நிலையில் முத்து இதற்கு பின்னணியில் ரோகிணி தான் காரணமாக இருப்பார். நம்மிடம் எதுவும் பண்ண வேண்டாம் சொல்லிவிட்டு அந்த ரவுடி சிட்டியிடம் சொல்லி கதிரை தேடிப் பிடிக்கலாம் என ஏற்பாடு பண்ணுகிறார் போல. பரவால்ல எந்த அளவுக்கு போகிறார்களோ போகட்டும் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக அந்த தம்பதிகளை நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு போய் சாப்பாடு பண்ணி கொடுக்கலாம் என முத்து, மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மீனா நல்ல ஐடியா தான் ஆனா உங்க அம்மா ஏதாவது சொல்லுவாங்க என்று சொல்கிறார். உடனே முத்து, அதெல்லாம் ஒன்னும் சொல்லாதபடி நான் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று அண்ணாமலை இடம் விவரத்தை சொல்லி விடுகிறார்.

அத்துடன் சொன்னபடி முத்து மற்றும் மீனா அந்த தம்பதிகளை அழைத்து விட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். விஜயாவும் எதுவும் சொல்லாத காரணத்தினால் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அந்த தம்பதிகள் இருக்கும் ஊரு நம்ம பார்லர் அம்மா ஊருதான் என்று சொன்னதும் விஜயா அப்படி என்றால் நீங்கள் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா என்று கேட்கிறார்.

ஆமாம் என்று சொல்லிய நிலையில் முத்து, ரோகினின் அப்பாவை பற்றி இவரிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார். உடனே விஜயாவுக்கு ரோகிணி அப்பாவை கண்டுபிடித்து விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய சொத்தும் கிடைத்துவிடும் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற சந்தோஷத்தில் ரூம்குள் இருக்கும் ரோகினியை கூப்பிடுகிறார்.

ஆனால் ரூம்குள் இருக்கும் ரோகினி இந்த விஷயத்தை எல்லாம் கேட்டுக்கொண்டு அடுத்து என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ரோகிணிக்கு பொய் சொல்வதெல்லாம் கைவந்த கலை என்பதற்கு ஏற்ப வெளியே வந்து ஏதாவது பொய் சொல்லி அந்த தம்பதிகளை குழப்பி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இனியும் ரோகிணியின் தில்லாலங்கடி வேலை பலிக்காது என்பதற்கு ஏற்ப அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் சிக்க போகிறார்.

அந்த வகையில் மீனா, செருப்பு தைக்கும் தாத்தாவை சந்திக்கும் பொழுது முத்துவின் போன் கையில் கிடைக்கப் போகிறது. இந்த போன் எப்படி இங்கே வந்தது, சத்யாவின் வீடியோ யார் மொபைலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் பொழுது ரோகினி போனுக்கு தான் அனுப்பி இருக்கிறது என்று தெரிந்ததும் இதற்கெல்லாம் காரணம் ரோகிணி தான் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிந்த விடும்.

அந்த வகையில் முத்து மற்றும் மீனா, ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விதமாக அடுத்த பாயாசத்தை கொடுக்க தயாராகி விடுவார்கள். இதுவரை ஆட்டம் போட்ட ரோகினி பிரச்சனையிலிருந்து சமாளிக்க முடியாமல் சிக்கித் திணற போகிறார்.

Trending News