ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ரோகிணியின் பிளானை தவிடு பொடியாக்கிய முத்து.. சரியான நேரத்தில் உள்ளே புகுந்து ஆட்டையை கலைத்த மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிடம் பணத்தை கேட்டு பிளாக் மெயில் பண்ணி வரும் தினேஷ் அடாவடியாக தற்போது மனோஜை சந்தித்து பேச ஆரம்பித்து விட்டார். அதன் மூலம் மனோஜ், குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகளை செய்து முத்துவை சீண்டி விட்டார். இதனால் மொட்டை கடுதாசி யார் போட்டார் என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் விதமாக முத்து நேரடியாக கோயிலுக்கு போய் தினேஷ் பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டார்.

இதற்கிடையில் முத்து மற்றும் மீனாவை டைவர்ட் பண்ணி அவர்களுக்கு பிரச்சனை கொடுத்து, வீட்டை விட்டு அனுப்பி விட்டால் நம்முடைய விஷயத்தில் தலையிட மாட்டார்கள் என்று ரோகிணி பிளான் பண்ணிவிட்டார். அந்த வகையில் மீனாவின் தம்பிதான் விஜயாவிடம் இருந்து பணத்தை திருடினார் என்கிற வீடியோ முத்துவிடமிருந்து நம் கைக்கு வர வேண்டும் என்று ரோகினி நினைக்கிறார்.

முத்துவிடம் தோற்றுப் போகும் ரோகினி

அந்த வகையில் அந்த வீடியோவை எடுப்பதற்காக ரோகினி அவருடைய தோழி வித்யாவை பயன்படுத்துகிறார். அதாவது வித்தியா, முத்துவின் காரை புக் பண்ணி அதில் போய்க் கொண்டிருக்கும் பொழுது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது என்று பொய் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்பொழுது அவசரமாக போன் பேச வேண்டியது இருக்குது என்று சொல்லி முத்துவிடம் இருந்து போனை வாங்கிவிட்டு அதில் இருக்கும் வீடியோவை எனக்கு அனுப்பி விடு என்று ரோகிணி, வித்யாவிற்கு பிளான் போட்டு விட்டார்.

வித்தியாவும் ரோகிணி சொன்னபடி முத்து காரில் ஏறிக்கொண்டு போன் சுவிட்ச் ஆப் ஆகிட்டது என்று பொய் சொல்லி முத்துவிடம் இருந்து போனை வாங்கி விடுகிறார். அப்படி முத்துவிடம் பேச்சு கொடுத்துகிட்டே இருக்கும் பொழுது முத்துவின் போனில் இருக்கும் வீடியோவை வித்தியா பார்க்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் தம்பி திருடிய வீடியோவை வித்தியா பார்த்துவிடுகிறார்.

உடனே வித்தியா, அந்த வீடியோவை ரோகிணிக்கு அனுப்பும் பொழுது சரியான நேரத்தில் மீனா, முத்துவுக்கு போன் பண்ணி விடுகிறார். அப்பொழுது அந்த போன் சத்தத்தை கேட்டதும் முத்து, வித்யாவிடம் இருந்து போனை வாங்கி மீனாவிடம் பேசிக்கொண்டே கார் ஓட்டுகிறார். அதற்குள் வித்யா சொன்ன இடத்திற்கு முத்து கூட்டிட்டு வந்து ட்ராப் பண்ணுகிறார்.

கடைசியில் ரோகினி பிளான் போட்டுக் கொடுத்ததை சுக்குநூறாக உடைக்கும் விதமாக வித்யாவிடம் இருந்து முத்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் எப்படியும் இந்த வீடியோ ரோகினி கையில் மாட்டாதபடி முத்து தப்பித்து விடுவார். ஆனால் அதற்குள் தினேஷ் யார் என்ன என்பதை முத்து கண்டுபிடிக்கும் விதமாக ரோகிணி பற்றிய சில விஷயங்கள் முத்துவிடம் சிக்க போகிறது.

இதுவரை பொய் பித்தலாட்டம் பண்ணி வந்த ரோகினி முதல் முறையாக ஒவ்வொரு விஷயத்தில் சிக்கி சின்னாபின்னமாக மாட்டப் போகிறார். ஏற்கனவே ரோகிணி வைத்திருக்கும் பார்லர் ரோகினி உடையது இல்லை. சும்மா அங்க வேலை தான் பார்க்கிறார் என்கிற விஷயம் முத்துவிற்கு தெரிந்து விட்டது. ஆனால் அண்ணாமலை இப்பொழுது சொல்ல வேண்டாம் என்ற சொன்ன காரணத்திற்காக முத்து யாரிடமும் சொல்லவில்லை.

ஆனால் இதற்கு அடுத்து ரோகிணி பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும்போது எல்லாத்தையும் போட்டு உடைக்கும் விதமாக முத்து, ரோகினியின் ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக கொண்டு வந்து விடுவார். அப்பொழுதுதான் தெரியும் விஜயா மற்றும் மனோஜ் எந்த அளவிற்கு கண்மூடித்தனமாக ரோகிணியை நம்பி ஆட்டம் போட்டிருக்கிறார்கள் என்று.

இனி முத்துவின் வேட்டை ஆரம்பம் என்று சொல்வதற்கு ஏற்ப தினேஷ் பற்றிய விஷயங்களை வீட்டிற்கு வந்து அனைவரது முன்னாடியும் போட்டு உடைக்கிறார். அப்பொழுதே ரோகிணிக்கு பயம் வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கலில் ரோகிணி நிச்சயம் முத்துவிடம் மாட்டி விடுவார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News