Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் அப்பா அண்ணாமலை வேலைக்கு கிளம்பியதால் அவரை ஸ்கூலில் டிராப் பண்ணுவதற்கு முத்து போய்விட்டார். அப்படி அங்கே இறக்கி விட்டதும் அப்பாவுடன் முத்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி, கிரிசை கூட்டிட்டு ஸ்கூலுக்குள் போய்விடுகிறார்.
போனதும் முத்து மற்றும் அண்ணாமலையை பார்த்ததும் பயத்தில் ரோகிணி ஒளிந்து கொண்டார். பிறகு அங்கே செக்யூரிட்டிடம் விசாரிக்கும் பொழுது அண்ணாமலை அந்த ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும், வாரத்திற்கு புதன்கிழமை மட்டும் வருவதாகவும் ரோகிணி தெரிந்து கொண்டார். உடனே கிரிஷை ஸ்கூலில் விடாமல் ரோகிணி வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுகிறார்.
அங்கே போனதும் ரோகிணி அம்மா, என்னாச்சு என்று கேட்ட நிலையில் க்ரிஷ் கோபமாக ரூமுக்குள் போய்விடுகிறார். பிறகு ரோகினி அங்கே மனோஜ் அப்பா வேலையில் சேர்ந்து இருக்கிறார். இதனால் கிரிஷ் அங்கே போனால் தேவையில்லாமல் பிரச்சினை வரும். அதனால் வாரத்தில் புதன்கிழமை மட்டும் கிரிஷ் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் மனோஜ், ரோகிணிக்கு போன் பண்ணி ECR இல் வீடு பார்க்க வந்திருக்கிறேன். நீயும் பார்க்க வா என்று கூப்பிடுகிறார். உடனே ரோகினி அங்கிருந்து கிளம்பி மனோஜ் இருக்கும் அந்த வீட்டிற்கு போய் விடுகிறார். அங்கே ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து வீடு முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார்கள். பெரிய வீடாக இருப்பதால் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு பிடித்து விட்டது.
ஆனால் அந்த வீட்டின் ஓனரை பார்க்கும் பொழுது ஏதோ ஏமாற்றுவது போல் தெரிகிறது. அந்த வகையில் லோன் வாங்கி இந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசைப்படும் மனோஜ் மற்றும் ரோகினி இந்த வீட்டிற்க்காக பணத்தை கொடுத்து கடனாளியாக ஏமாந்து போய் நிற்கப் போகிறார்கள். அடுத்ததாக மீனா, டெக்கரேஷன் மூலம் வந்த லாபம் 7000ரூபாய் என்று முத்துவிடம் சொல்லி உண்டியலில் பணம் போடுகிறார்.
அத்துடன் இன்னைக்கு உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன். தினமும் நான் மட்டும்தான் உண்டியலில் பணத்தை போடுகிறேன் என்று மீனா எதார்த்தமாக சொல்லி மாடியில் இருக்கும் துணியை எடுத்துட்டு வாங்க என்று சொல்லிவிடுகிறார். ஆனால் மீனா சொன்னதும் முத்துவின் முகம் வாடி போய்விட்டது. ஏதோ மீனா குத்தி காட்டி பேசுவது போல் முத்து பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து மீனா அதிகம் சம்பாதிக்கும் பட்சத்தில் முத்துவுக்கு பொறாமை வரப்போகிறது. இதனால் இவர்களுக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்களும் விரிசல்களும் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி ஜெயித்துக் கொண்டு வரும் ரோகிணி எதிலும் மாட்டாமல் சந்தோசமாக அடுத்தடுத்து வெற்றியை பார்த்துக் கொண்டு வருவது சகிக்க முடியவில்லை.