Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா எதார்த்தமாக நான் தான் உங்களை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். தினமும் உண்டியலில் அதிக பணத்தை போட்டு சேமிப்பதும் நான் தான் என்று முத்துவின் முன்னாடி பேசி விட்டார். இதனால் முத்துவின் முகம் வாடிப் போய்விட்டது. இதற்கு ஒரு விதத்தில் முத்துவுக்கு பொறாமை ஏற்பட்டதால் யாரிடமும் சொல்லாமல் காலையிலேயே சவாரிக்கு கிளம்பிவிட்டார்.
இது தெரியாத மீனா, காலையிலிருந்து முத்துவை காணவில்லை என்று எல்லா பக்கமும் தேடி பார்க்கிறார். போன் பண்ணியும் பார்க்கிறார் ஆனால் போன் எதுவும் எடுக்காத நிலையில் நேராக கார் செட்க்கு சென்று விடுகிறார். அங்கே முத்துவின் நண்பர்கள் அனைவரும் இருந்த பொழுது செல்வத்திடம் முத்து வந்தாரா பேசினாரா என்று விசாரித்து பார்க்கிறார்.
ஆனால் அவர்களுக்கும் தெரியாத பட்சத்தில் செல்வம், முத்துவுக்கு போன் பண்ணி பார்க்கிறார். அவர்களுடைய ஃபோனையும் முத்து எடுக்கவில்லை. உடனே மீனா, சத்யாவை கூட்டிட்டு எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கிறார். அப்பொழுது செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி இடம் போய் கேட்டுப் பார்க்கலாம் என்று அவர்களிடம் கேட்கிறார்கள்.
அவர்கள் காலையில் வந்து எங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு போனார் என்று சொல்லிய நிலையில் மீனா, என்னிடம் ஃபோன் பண்ணாமல் பேசாமல் இருக்க மாட்டாரே என்று புலம்பி தவிக்கிறார். இதனை அடுத்து விஜயா, பார்வதியிடம் சென்று ரோகிணி மற்றும் மனோஜ் அதிக லாபத்தை சம்பாதித்து தனியாக வீடு வாங்கப் போகிறார்கள்.
அவர்களுக்கு கிடைத்த லாபத்தில் எனக்கு வளையலும் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் என்று பெருமையாக பேசி புகழ்ந்து தள்ளுகிறார். ஆனால் ரோகினி மற்றும் மனோஜ் பார்த்திருக்கும் வீட்டின் மூலம் ஏமாறப்போகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர்கள் கிடையாது.
மனோஜிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பறித்து விட்டு அதன் பின் காணாமல் போவதற்கு பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்னணியில் ஜீவா இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஜீவா கடைசியாக சென்னைக்கு வந்த பொழுது ரோகினி கண்டுபிடித்துவிட்டார். அந்த வகையில் மனோஜிடமிருந்து ஏமாற்றிய பணத்தை போலீஸிடம் சொல்லி திருப்பி 30 லட்ச ரூபாயாக வாங்கிக் கொண்டார்.
அந்த 30 லட்சம் ரூபாயை ஆட்டைய போட வேண்டும் என்றுதான் ஜீவா, ரோகிணி மற்றும் மனோஜ்க்கு பிளான் பண்ணி சிக்க வைத்திருப்பது போல் தெரிகிறது. எது எப்படியோ மனோஜ் மற்றும் ரோகினி ஏமாந்து கடனாளியாகி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள்.