வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

விஜயாவிடம் பேச அப்பாவை தூது அனுப்பிய முத்து.. ரோகிணி வைத்து பரமபதம் ஆடப்போகும் சிட்டி, தப்பித்த மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன் டிஆர்பி ரேட்டிங்கில் ஒய்யாரமாக ஜொலித்தது. ஆனால் போகப் போக ரோகிணி பற்றிய விஷயங்கள் வெளிவராமல் முத்து மற்றும் மீனா தொடர்ந்து மாட்டிக் கொண்டு தவிப்பதால் இந்த நாடகத்தை பார்ப்பதற்கு வெறுப்பாக இருக்கிறது என்று சில நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டது.

அதையெல்லாம் போக்கும் விதமாக இனி அடுத்தடுத்த சுவாரசியமான விஷயங்கள் நடக்க இருக்கிறது. அதிலும் ரோகிணி செய்த பாவங்கள் அனைத்திற்கும் தண்டனை கிடைக்கும் விதமாக அணு அணுவாக சித்திரவதை அனுபவிக்க போகிறார். அதாவது முத்து மற்றும் மீனாவை பலியாடாக சிக்க வைத்து அதில் நாம் குளிர் காய வேண்டும் என்று ரோகிணி ஒரு பிளான் போட்டார்.

ஆனால் அதில் தற்போது ரோகிணியை மாட்டிக்கொள்ளப் போகிறார். ரோகிணி பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்ட PA தற்போது சிட்டி இடம் இருக்கிறார். சிட்டி ஒண்ணும் நல்லவர் கிடையாது, அதனால் PA மற்றும் சிட்டி இருவரும் சேர்ந்து கொண்டு ரோகினியை சித்திரவதை பண்ணப்போகிறார்கள். ரோகிணி விஷயம் தற்போது சிட்டிக்கும் தெரிய வந்துவிட்டது.

அதனால் மறைமுகமாக தற்போது ரோகிணியை மிரட்டி பணம் கேட்க சிட்டி துணிந்து விட்டார். ரோகிணிக்கும் வேறு வழி இல்லாததால் சிட்டி சொன்னபடி அடங்கி தான் ஆக வேண்டும். இனி ரோகினின் அஸ்திவாரம் சிட்டி கையில் என்பதற்கு ஏற்ப ரோகிணியை வைத்து பரமபதம் ஆட போகிறார். இதை முத்து கண்டுபிடித்து ரோகினியின் முகத்திரையை வெளியே கொண்டு வரப் போகிறார்.

இதற்கிடையில் சத்யாவை வெளிக்கொண்டு வருவதற்காக முத்து அப்பாவை சந்தித்து எப்படியாவது அம்மாவிடம் பேசி நீங்கள் தான் இந்த கேசை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று தூது அனுப்புகிறார். அதன்படி விஜயாவை தேடி பார்வதி வீட்டிற்கு வரும் அண்ணாமலை, விஜயாவிடம் நைசாக பேசி சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க வைத்து விட்டார்.

அந்த வகையில் மீனா ஓரளவுக்கு தப்பித்து விட்டார். இனி ரோகிணி தான் மாட்டிக்கொண்டு அல்லல் படப் போகிறார். தற்போது முத்துவின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப ரோகிணிக்கு கொடுக்கும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது. ரோகினியை தலையில் வைத்து தூக்கி ஆடிய விஜயா மற்றும் மனோஜ்க்கு பெரிய இடியாகவும் விழப்போகிறது. அந்த நாள் கிட்ட நெருங்கி விட்டது இனி சிறகடிக்கும் ஆசை சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

Trending News