வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மனோஜை ரவுண்டு கட்டி அடித்த முத்து.. ஜீவா திருப்பிக் கொடுத்த பணம், அடுத்த பாயசம் ரோகிணிக்கு தான்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் சுயநலத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார். அப்படித்தான் டீலர்ஷிப் கொடுத்த சந்தோஷ் என்பவர் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை நடிக்க சொல்லி கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மொத்த குடும்பத்திடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். ஆனாலும் முத்து எங்களுடைய வேலையை விட்டுட்டு நடித்து கொடுக்கணும் என்றால் அதற்கு பணம் கொடுக்கணும் என்று சொன்னார்.

அதற்கு மனோஜ், சந்தோஷ் சார் பணம் கொடுக்கவில்லை, ஆனால் முத்து கண்டிப்பாக இந்த விளம்பரத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதாக பொய் சொல்லி விட்டார். உடனே முத்து, சந்தோஷ் சார் சொல்லிட்டார்னா ஓகே நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம் என்று சம்மதம் கொடுத்து விடுகிறார். பிறகு அனைவரும் ஒத்துக் கொண்ட நிலையில் விஜயா ரூமுக்குள் இருக்கும்பொழுது யாருக்கும் தெரியாமல் மனோஜ் அம்மாவிற்கு மட்டும் நடித்துக் கொடுப்பதற்காக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டார்.

அந்த பத்தாயிரத்தை பார்த்ததும் விஜயா சந்தோஷப்பட்டு விட்டார். அடுத்து அனைவரும் ரெடியாகி மனோஜின் ஷோரூம் கடைக்கு போய் விட்டார்கள். அங்கே அண்ணாமலை மற்றும் விஜயா தான் அந்த கடைக்கு ஓனராகவும், பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை யார் வேண்டுமானாலும் பொருளை வாங்கும் அளவிற்கு கம்மி விலையில் எல்லா பொருளும் தரமாக கிடைக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி நடித்துக் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் ரோகிணி மற்றும் மனோஜ் காசு பணத்தை பெருசாக நினைக்காமல் பெரிய தொழில் அதிபராக வருவது போல் ஆக்டிங் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும். அடுத்ததாக ரவி மற்றும் சுருதி இருக்கிற பணத்துல என்ன பொருட்களை எல்லாம் வாங்க முடியும் என்பதற்கு ஏற்ப நடுத்தர குடும்பத்தினராக நடிக்க வந்து விட்டார்கள். அடுத்து வழக்கம்போல் முத்து மற்றும் மீனா பணம் இல்லாத வீட்டில் தவணை முறையில் பொருட்களை வாங்குவது போல் நடிக்க வேண்டும் என்று கான்செப்ட்.

இதை கேட்ட முத்து, மீனா மற்றும் அண்ணாமலையிடம் இப்பொழுது கூட நாங்க ஒன்னும் இல்லாமல் தான் இருக்கணும் அப்படித்தானே என்று வெந்து புலம்புகிறார். உடனே மீனா இந்த நிலைமை கூடிய சீக்கிரத்தில் மாறிவிடும் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் படுத்துகிறார். பிறகு ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுத்த கேரக்டரை நடிக்கும் பொழுது அதில் ஏகப்பட்ட தவறுகள் நடப்பதால் ஷூட்டிங் எடுக்க வந்தவர் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிடுகிறார்.

அத்துடன் முத்துவின் அப்பா அண்ணாமலையும் மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி கூப்பிடுவதால் முத்துக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. ஆனால் கடைசிவரை அந்த ஷூட்டிங் எடுப்பவர் யாருக்கும் மரியாதை கொடுக்காமல் மட்டம் தட்டி பேசுவதை பார்த்ததும் கோபத்தில் முத்து கொந்தளித்து விட்டார். உடனே அந்த ஷூட்டிங் எடுப்பவர், நீங்க யாரும் ஒன்னும் சும்மா நடித்துக் கொடுக்கவில்லை.

நீங்கள் நடிப்பதற்கு சந்தோஷ் சார் மொத்தமாக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். இது கேட்டதும் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சியாக விடுகிறார்கள். வீட்டிற்க்கு வந்ததும் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து மனோஜை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள். ஆனால் சொன்னதே சொல்லும் கிளி பிள்ளையாக மனோஜ் ஷூட்டிங் முடித்துவிட்டு சொல்லலாம் என்று இருந்தேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒவ்வொருவரும் கேட்ட கேள்வி என்னவென்றால் சந்தோஷ் சார் பணம் கொடுத்ததை ஏன் மறைத்தாய் என்றுதான். ஆனால் அதை சொல்லாமல் மனோஜ் சமாளிக்க பார்த்ததால் ரவி அங்கிருக்கும் பொருளை தூக்கிக்கொண்டு கோபத்தில் அடிக்கப் போய்விட்டார். பிறகு முத்து தடுத்து இவனுக்கு எல்லாம் கையாள பேசினால் மட்டும்தான் புரியும் என்று அடிக்கப் போய்விட்டார். அந்த வகையில் மனோஜை ரவுண்டு கட்டி முத்து அடித்து விட்டார்.

பிறகு ரோகிணி மற்றும் விஜயா தடுத்து விட்டார்கள். மனோஜ் சொன்ன ஒரு பொய் வெளிவந்ததற்கு இந்த அளவுக்கு ஆக்ரோஷம் என்றால், ஜீவா 30 லட்ச ரூபா பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். அந்த பணத்தை வைத்து தான் ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தால் தான் முத்துவின் உண்மையான ஆட்டம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியவரும்.

அது மட்டுமல்லாமல் ரோகிணியின் பொய்யும் பித்தலாட்டம் விஷயமும் முத்துக்கு தெரிய வரவேண்டும். முத்துவிடம் சிக்கி சின்னா பின்னமாக ரோகிணி அவஸ்தைப்பட வேண்டும். அந்த வகையில் அடுத்த பாயாசம் ரோகிணிக்கு தான் என்பதற்கு ஏற்ப கூடிய சீக்கிரத்தில் மாட்டப் போகிறார்.

Trending News