சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஓவராக அலப்பறை பண்ணும் விஜயா.. முத்துவிடம் கையும் களவுமாய் மாட்டப் போகும் ரோகினியின் மாமா

Sirakadikka Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகினி பணக்காரப் பெண் என்று நினைத்து விஜயா வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவராக அலப்பறை பண்ணி வருகிறார். அதாவது வெளிநாட்டில் இருந்து ரோகினி மாமா வருவதாக வீட்டையே ரெண்டாக்கி ஒவ்வொருவரையும் வேலை வாங்குகிறார். ஆனால் ரோகிணி பொய் பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றுகிறார்.

இது தெரியாமல் விஜயா பணத்துக்காக ரோகினியை கண்மூடித்தனமாக நம்புகிறார். ரோகிணியும் மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கிறது என்பதற்காக சொந்த பணத்தையும் நகையும் கொடுத்து கறி வெட்டும் நபரை மாமாவாக நடிப்பதற்கு பேரம் பேசி இருக்கிறார். அந்த வகையில் ரோகிணி மாமாவாக வரும் நபர் ஒருவேளை முத்துவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இல்லை என்றால் கூடிய விரைவில் முத்துவிடம் ரோகினி மாமாவாக நடிக்க வருபவர் சீக்கிரத்திலேயே மாட்டப் போகிறார். அப்பொழுது தான் விஜயாவின் உண்மையான சுயரூபம் என்ன என்று ரோகினிக்கு தெரிய வரப்போகிறது. ரோகினி பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிந்து விட்டால் வேலைக்காரியை விட மோசமாக நடத்தி விடுவார்.

Also read: மாரிமுத்து கேரக்டரை ஈடுகெட்ட போகும் நந்தினியின் கணவர்.. செல்லா காசாக விழி பிதுங்கி நிற்கும் குணசேகரன்

இதற்கிடையில் விஜயா பண்ணும் அலப்பறையை யாருமே கண்டுக்க முடியாத அளவிற்கு வாய் மூடிட்டு இருப்பது தான் கொஞ்சம் எரிச்சல் படுத்துகிற மாதிரி இருக்கிறது. முக்கியமாக விஜயாவின் கணவர், மீனாவை வேலைக்காரி மாதிரி நடத்தும் மனைவியை எதுவுமே சொல்லாமல் வாய மூடிட்டு பாத்துட்டு இருப்பது சகிக்கவில்லை. பாட்டி மட்டும் அவ்வப்போது விஜயாவை ஆட்டிப் படைக்கிறார்.

ஆனாலும் இந்த விஜயா கொஞ்சம் கூட திருந்தவில்லை. இதனைத் தொடர்ந்து மீனாவும் இனிமேல் என்னுடைய வேலை இதுதான் என்று ஒரு மருமகளாக மட்டும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு எல்லாத்துக்கும் அடிமை வேலை பார்த்து, மாமியார் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு வேலை பார்த்தால் வேலைக்காரி மாதிரி தான் கடைசி வரை இருந்தாக வேண்டும்.

Also read: டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்

Trending News