Biggboss 8-Muthukumaran: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஏகப்பட்ட விமர்சனங்களை கடந்து வந்த இந்த சீசனின் டைட்டிலை வென்றுள்ளார் முத்துக்குமரன்.
பேச்சாளராக இருந்த இவர் தன்னுடைய பேச்சுத் திறமை மட்டும் இன்றி கடின உழைப்பால் இந்த வெற்றியை பெற்றுள்ளார். வீட்டுக்குள் மட்டுமல்லாமல் வெளியிலும் ஏகப்பட்ட விமர்சனங்கள் இவர் மீது இருந்தது.
ஆனால் நேர்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை அவர் நிரூபித்து காட்டிவிட்டார். இப்படித்தான் அவருடைய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வரும் முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வரும் முத்து
நன்றி மறப்பது நன்றன்று. வீட்டுக்குள் இருக்கும்போது எல்லோரும் வெளியில் உனக்கு ஆதரவு இருக்கு என சொன்னார்கள்.
ஆனால் வெளியில் வந்து பார்க்கும் போது தான் எப்படி ஒரு அன்பும் ஆதரவும் இருக்கு என தெரிகிறது. இந்த அன்புக்கு அடையாளமாக இந்த வெற்றிக்கோப்பை கிடைத்துள்ளது.
இதை என்னுடைய நேர்மையால் காப்பாத்திக்குவேன். இது என்னுடைய உழைப்பின் மீது சத்தியம். அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி வெற்றி பெற்று வந்த முத்துவுக்கு அவருடைய ஊரில் தடபுடலான வரவேற்பும் கிடைத்துள்ளது. இதுவரை பிக்பாஸ் சீசன்களில் சின்னத்திரை பெரிய திரை பிரபலங்களுக்கு தான் டைட்டில் கிடைத்திருக்கிறது.
முதல் முறையாக ஒரு பேச்சாளர் டைட்டிலை வென்றுள்ளார். இதை முத்துவின் ரசிகர்கள் மண்ணின் மைந்தனுக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.