Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து தங்கள் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் இன்று முத்துவின் அம்மா அப்பா வீட்டுக்குள் வருகின்றனர்.
அதில் முத்துவின் அம்மா அவரை கட்டிபிடித்து கதறிய காட்சி பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் அவர் கூறிய ஒரு வார்த்தையும் சிலிர்க்க வைத்துள்ளது.
ஏற்கனவே முத்துவின் விளையாட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என பார்வையாளர்கள் முடிவே செய்து விட்டனர்.
கண்கலங்க வைக்கும் பிக்பாஸ் இன்றைய எபிசோட்
அந்த பெருமை முத்துவின் அம்மா கண்களில் அப்படியே இருக்கிறது. நம்முடைய பரம்பரையை பெருமைப்படுத்திட்ட என அவர் சொன்னது உண்மையான வார்த்தை.
மிடில் கிளாஸ் பையனான முத்து இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப பெருசு என கூறியிருந்தார். அதைத்தான் அவரின் அம்மா அப்பாவும் கூறுகிறார்கள்.
இன்று அவர்களுடைய வரவு நிச்சயம் ஒட்டுமொத்த வீட்டையும் கண்கலங்க வைத்து விடும். அதனால் இன்றைய எபிசோடை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.