சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அண்ணா சீரியலில் சௌந்தரபாண்டியனை மண்ணை கவ்வ வைத்த முத்துப்பாண்டி.. சண்முகம் இசக்கிக்கு வைத்த செக்

Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், முத்துப்பாண்டி ப்ரோமோஷனுக்காக ட்ரைனிங் போயிருந்த நிலையில், வீட்டிலிருந்த இசக்கியை கொடுமைப்படுத்தும் விதமாக சவுந்தரபாண்டி அராஜகத்தை பண்ணி வைத்தார். இதனால் தங்கச்சி வாழ்க்கை மீட்டெடுக்கும் விதமாக சண்முகம் உனக்கு இந்த புகுந்த வீடே வேண்டாம் என்று சொல்லி மேளம் தாளத்துடன் இசக்கியை வரவேற்பு கொடுத்து வீட்டிற்கு கூட்டிப் போய்விட்டார்.

ஆனால் தற்போது ட்ரெயினிங் முடிந்து வீட்டிற்கு திரும்பும் முத்துபாண்டியை வைத்து சண்முகத்தையும் இசக்கியையும் பழிவாங்க வேண்டும் என்று சௌந்தரபாண்டி மனைக்கோட்டை கட்டிவிட்டார். அந்த வகையில் வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்தும் விதமாக சவுந்தரபாண்டி, இனிதான் அந்த சண்முகத்திற்கு இருக்கிறது.

என் பையனை வைத்து என்ன எல்லாம் ஆட்டம் ஆட போகிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்கிறார். இதனால் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்ததும் என்னலாம் நடக்கப்போகிறது என்று சௌந்தரபாண்டியன் மனைவி பயப்பட ஆரம்பித்து விட்டார். அதே மாதிரி முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்ததும் சௌந்தரபாண்டி மாலை மரியாதை போட்டு வரவேற்கிறார்.

ஆனால் முத்துப்பாண்டிக்கு வீட்டில் என்ன நடந்தது, அப்பா என்ன பண்ணினார் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது. அதனால் எப்படி இசக்கி மேலே மண்ணெண்ணெய் ஊற்றி கொடுமைப்படுத்தினாரோ, அதே மாதிரி வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி சவுந்தரபாண்டி மீது மண்ணெண்ணையை ஊற்றி பொண்டாட்டிக்கு செய்த கொடுமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தரமான சம்பவத்தை முத்துப்பாண்டி செய்து அப்பாவை பயம் காட்டிவிட்டார்.

இதை எல்லாம் தாண்டி சண்முகத்தின் வீட்டிற்கு இசக்கியை முத்துபாண்டி பார்க்கப் போகிறார். அப்படி பார்த்துட்டு வரும் பொழுது கூடவே இசக்கியையும் கூட்டிட்டு வந்து விடுவேன் என்று நம்பிக்கையில் போய் விடுகிறார். அங்கே போனதும் முத்துபாண்டி இசக்கியை கூப்பிடுகிறார், ஆனால் இசக்கி அண்ணன் ஓகே சொன்னால் தான் நான் வருவேன் என்று சொல்லிய நிலையில், சண்முகம் என் தங்கை இந்த வீட்டை விட்டு வேற எங்கேயும் வரமாட்டார் என்று சொல்கிறார்.

ஆனால் கூப்பிட்டது கணவர் முத்துப்பாண்டி, இன்னொரு பக்கம் அண்ணன் சண்முகம் இதனால் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் இசைக்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் அண்ணன் சொன்னால் தான் நான் வீட்டுக்கு வருவேன் என்று இசக்கி சொல்லிய நிலையில் முத்துப்பாண்டியை நம்பி சண்முகம் தங்கையை புகுந்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News