Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கண் திருஷ்டி போட்டோவை வீட்டிற்கு எடுத்துட்டு வந்து விஜயாவிடம் மனோஜ் காட்டுகிறார். இதில் இருப்பது நல்லா பாருங்க நீங்க தான் என்று ரோகினி சொல்கிறார்.
உடனே போட்டோவை பார்த்து கடுப்பான விஜயா அந்த போட்டோவை தூக்கி தூர போடுகிறார். அது என்ன என்று தெரியாமல் அண்ணாமலை எடுத்துட்டு வீட்டுக்குள் வருகிறார். இந்த போட்டோவை ஏன் தூக்கி போடுகிறாய் என்று விஜயாவை பார்த்து கேட்கிறார். அதற்கு முத்து, அந்த போட்டோவை நல்லா பாருங்க.
அது நம்ம அம்மா தான் என்று சொல்லிய நிலையில் விஜயா கோபப்பட்டு கத்துகிறார். உடனே அண்ணாமலையும் அந்த போட்டோவை பார்த்து விஜயாவையும் பார்த்து நக்கலாக சிரித்து கிண்டல் பண்ணுகிறார். இதற்கெல்லாம் காரணம் மீனா தான் என்று வழக்கம்போல் விஜயா, மீனாவை திட்டி நீ தான் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி வியாபாரம் பண்ணிக்கிறியா?.
பூ கட்டி ஒரு பக்கம் விற்கிறாய், இன்னொரு பக்கம் என்னை இப்படி போட்டோ மாதிரி ரெடி பண்ணி லாபம் சம்பாதிக்கிறியா என்று வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். முத்து எதுக்கெடுத்தாலும் மீனாவை குத்தும் சொல்வதை நிறுத்துங்க என சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.
இந்த சமயத்தில் சுருதி, நான் தான் அன்னைக்கு உங்களை இந்த மாதிரி போட்டோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் அனுப்பி வைத்தேன். இதை பார்த்த ஒருவர் கண்ணுக்கு கண் திருஷ்டி மாறி இருந்திருக்கும் என்று போட்டோ ரெடி பண்ணி விற்க ஆரம்பித்து இருக்கிறார்.
இதுக்கும் மீனாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிய நிலையில் விஜயா, ஸ்ருதி தான் பண்ணியிருக்கிறார் என்று தெரிந்ததும் எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டார். ஆனால் இவ்வளவு கலவரத்திலும் மனோஜ், இந்த போட்டோவை நான் என்னுடைய ஷோரூமில் மாட்டிக் கொள்ளலாமா?.
ஏனென்றால் இந்த போட்டோவுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்று எல்லோரும் நம்புகிறார்கள். அதை நம்பிக்கையில் நானும் வைத்தால் எனக்கும் லாபம் கொட்டும் என விஜயாவிடம் சொல்கிறார். உடனே விஜயா கடுப்பாகி என் போட்டோவை உன்னுடைய ஷோரூமில் வைத்தாய் என்றால் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.
ஒழுங்கு மரியாதையை எடுத்து தூர போடணும் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம்க்கு போகிறார்கள். அங்கே கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் விஜயாவின் கண் திருஷ்டி போட்டோவை வைத்து மாலை போட்டு பூஜை பண்ணுகிறார்.
உடனே மனோஜ் அப்படி எல்லாம் பண்ண கூடாது என்று சொல்லி போட்டோவை எடுத்து ஓரமாக வைக்க சொல்கிறார். அந்த சமயத்தில் மனோஜ்க்கு சந்தோஷ் சார் கால் பண்ணி எனக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அதற்கு இன்சென்டிவாக உனக்கு பத்து லட்ச ரூபாய் அனுப்பி வைத்துள்ளேன் என்று சொல்லிய நிலையில் அந்த மெசேஜை மனோஜ் பார்த்து ரோகினிடமும் காட்டி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.
இதற்கெல்லாம் அந்த கண் திருஷ்டி போட்டோ தான் என்று மனோஜ் சொல்லிய நிலையில் அதை மறுபடியும் எடுத்து பூஜை பண்ணலாம் என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி வேண்டாம், நாம் இந்த மாதிரி போட்டோவை பூஜை பண்ணுகிறோம் என்று தெரிந்தால் அத்தை தேவையில்லாமல் திட்டுவாங்க.
பணத்துக்காக இப்படி பண்ணிட்டியா என்றும் கோபப்படுவார். அதனால் எதுவும் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார். அந்த சமயத்தில் மனோஜின் நண்பர் ஷோரூம்க்கு வந்து ECRல் ஒரு வீடு வருகிறது. 5 கோடி மதிப்புள்ள வீடு, எனக்கு தெரிந்த நண்பர் மூலம் உனக்கு 3 கோடிக்கு வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
மனோஜ் ஆரம்பத்தில் வாங்கவா? வேண்டாமா? என்று யோசித்து நிலையில் நண்பர் ஆசை வார்த்தைகள் பேசி மனோஜ் மற்றும் ரோகினி மனதில் ஆசையை தூண்டி விடுகிறார். உடனே இவர்களும் வாங்கிவிடலாம் என்று முடிவுக்கு வந்து விடுகிறார்கள். கடைசியில் அந்த வீடு வில்லங்கத்தில் இருப்பதால் கையில் இருக்கும் லாபத்தையும் இழந்து ஏமாறப் போகிறார்கள்.
இந்த சமயம் ஜீவாவும் கனடாவில் இருந்து திரும்பி வருவதால் முத்துவும் ஜீவாவும் அடிக்கடி சந்தித்து பேசும் பொழுது மனோஜ் பற்றிய விஷயங்களையும் திருப்பிக் கொடுத்த 30 லட்சம் விஷயங்களும் வெளிவர போகிறது. இதற்கிடையில் ரோகினி மீது சந்தேகம் பட்ட முத்து டிடெக்டிவ் ஏஜென்ட் மூலம் ரோகிணி ரகசியங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அடுத்ததாக மீனாவை பாலோ பண்ணும் முத்துவின் நண்பர், அண்ணாமலை வீட்டிற்கு சென்று நான் காதலிக்கும் பெண் இந்த வீட்டில் தான் இருக்கிறார். நான் அவங்களை கல்யாணம் பண்ணுவதற்கு உங்களுடைய சம்மதம் வேண்டும் என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை யார் என்று கேட்கும் பொழுது மீனா மற்றும் முத்துவும் உள்ளே இருந்து வருகிறார்கள்.
அப்பொழுது முத்து, நீ யாரை சொல்கிறாய் என்று கேட்கும் பொழுது மீனாவை கைகாட்டி நான் காதலிக்கும் பெண் இவங்க தான் என்று சொல்லி நிலையில் அனைவரும் முத்துவை நக்கலாக பார்த்து சிரிக்கிறார்கள்.