திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எனக்கு போட்டி இவங்க 4 பேரும் தான்.. வெளிப்படையாய் சவால் விட்ட ப்ரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும் சாதிக்கலாம் என்று டாப் நடிகைகளுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து வருகிறவர் தான் பிரியா பவானி சங்கர். ஆனாலும் வந்த முதல் படத்திலேயே இவருக்கான வெற்றியை பார்த்து விட்டார் என்றால் இந்நேரம் இருக்கும் இடம் தெரியாமல் போயிருந்திருப்பார்.

ஆனால் அப்படி ஏதும் அமையாமல் ஒவ்வொரு படத்திற்கும் முன்னேற்றம் காட்டி நடித்து தற்போது முன்னணி நடிகையாக வந்து விட்டார். அந்த தைரியத்தினால் எனக்கு போட்டி இந்த நான்கு நடிகை தான் என்று வெளிப்படையாகவே அந்த நடிகைகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.

Also read: பிரேக் அப், நம்பிக்கை துரோகத்தை நானும் சந்தித்திருக்கிறேன்.. கண் கலங்கிய பிரியா பவானி சங்கர்

அவர்கள் யார் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரும் அவரைப் போல ஒன்றுதான் படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு இடத்தை சினிமாவில் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு வந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்தார். கிட்டத்தட்ட கனவு கன்னியாக அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் அந்த தருணத்தில் திடீரென்று ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்ததில் இருந்து இவருடைய மார்க்கெட் சரிந்து விட்டது.

Also read: ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றிய பிரியா பவானி சங்கர்.. படாத பாடுபடும் ஜிம் மாஸ்டர்

அதற்கு அடுத்து சாய் பல்லவி இவரும் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பே வெள்ளிதிரைக்கு வந்து நடித்த முதல் படத்திலேயே அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இவருடைய டான்ஸுக்கு அத்தனை ரசிகர்களும் போதை ஆகிவிட்டார்கள். அத்துடன் இவருடைய படங்கள் என்றாலே பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளமானவர் இருக்கிறார்கள்.

அடுத்ததாக ஐஸ்வர்யா லட்சுமி இவர் இப்பொழுது தான் சினிமாவிற்கு வந்திருந்தாலும் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டருக்கு பிறகு இவருடைய மவுஸ் கூடிக்கொண்டு வருகிறது. அதனால் பிரியா பவானி சங்கர் இவர்கள் நான்கு பேரையும் டார்கெட் ஆக வைத்து போட்டி போட்டு வருகிறார்.

Also read: அப்பிடில்லாம் கவர்ச்சி காட்ட முடியாது என ஜெயித்த 5 நடிகைகள்.. ஒரு படி மேலே சென்ற சாய் பல்லவியின் இமேஜ்

Trending News