வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எனது அத்தனை விவாகரத்துகளுக்கு காரணம் அப்பாதான் – வனிதா விஜயகுமார் என்ன சொன்னார் தெரியுமா?

1995 ஆம் ஆண்டு, விஜயின் சந்திரலேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின், மாணிக்கம், தேவி, அனீதி, ஹரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் ஜொலித்தார். குறிப்பாக சின்னப்பாப்பா பெரிய பாப்பா. திருமதி ஹிட்லர், கார்த்திகை தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.

அதன்பின், சின்னத்திரையில் தன்னுடன் நடித்த ஆகாஷ் என்பவரை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியர்க்கு விஜய் ஹரி, ஜோவிதா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அதன்பின், வனிதா – ஆகாஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். முதல் கணவர் ஆகஷை விவாகரத்து செய்த பின், சில மாதங்களில் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஜெயனித்தா என்ற மகள் இருக்கிறார். அவரை 2012 ஆம் ஆண்டு விவாரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் வனிதா அவருக்கு ஜோடியாக ஒரு MGR, சிவாஜி, ரஜினி, கமல். இப்படத்தை அவரே தயாரித்திருந்தார். இப்பட ஷூட்டிங்கின் போதே இருவருக்கும் காதல் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது பட புரமோசனுக்காக என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜயகுமாரின் மகளாக அறியப்பட்டாலும் வனிதா விஜயகுமார் தனது செயல்பாடுகளால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்தனர்.

அதன்பின் குப் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றார். சினிமாவில் நடித்துக் கொண்டே ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று யூடியூப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்போது சேனல் தொடங்கிய சமயத்தில் பீட்டர் பால் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் காதலித்தனர்.

பின் 2020 இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணம் முறையாகப் பதிவு செய்யப்படாத நிலையில் பீட்டர் பால் குடிப்பழக்கத்தில் இருந்ததால் அவரை 3 மாதங்களில் வனிதா பிரிந்தார். சமீபத்தில் அவர் பிரசாந்த்துடன் இணைந்து நடித்த அந்தகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

என் அப்பாதான் சிறந்த தந்தை; என் கணவர்களிடமும் இதையே எதிர்பார்த்தேன் – வனிதா

பிரபல யூடியூப் சேனல் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, ’’என் குழந்தை பருவத்தில் என் தந்தை தான் இருப்பதிலேயே சிறந்த தந்தை என்று நினைத்தேன். அவர் சிறந்த தந்தை என நினைத்தேன். அவருக்கு ரெண்டு மனைவிகள்.

ஒரு மனைவியை வைத்திருப்பவரே கஷ்டப்படும் நிலையில் அப்பாவுக்கு ரெண்டு மனைவிகள். இது சாதாரண விஷயமல்ல.என் அம்மா, அப்பாவுக்கு 2 வது மனைவி. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ரெண்டு பேரைரும் சமமாக நடத்தினார்.

நான் சிறிய வயதில் இருந்து அப்பா என்றால் இப்படித்தான் இருப்பார் என்று வளர்ந்ததால், மற்ற ஆண்களும் இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. என் அப்பாவைப் போல என் சகோதர் அருண் விஜயும்.

என் வாழ்க்கையில் பல ஆண்டுகள், இந்த சிந்தனையோட்டம் உள்ள ஆண்களுடன் சென்றதால் நான் என் கணவர்களிடமும் இதையேதான் எதிர்பார்த்தேன். அது இல்லாததால்தான் அவர்களுடனான உறவை ஏற்க மனம் மறுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending News