வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மைனா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? 11 வருடம் கழித்து பிரபுசாலமன் கூறிய உண்மை

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு மலையாள சினிமாவில் பல படங்கள் பணியாற்றினார்.

நடிகைகள் பொருத்தவரை என்னதான் பல படங்கள் நடித்தாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த ஆசை அனன்யாவுக்கும் இருந்துள்ளது.

அப்போதுதான் நாடோடிகள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க உடனே சம்மதித்துள்ளார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து அனன்யாவிற்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை தமிழ் சினிமாவில் உருவாக்கியது.

ananya
ananya

அப்போது பிரபு சாலமன் மைனா படத்தில் நடிப்பதற்கு முதலில் அனன்யாவை அணுகியுள்ளார். ஆனால் அப்போது நாடோடிகள் படம் வெற்றி அடைந்ததால் பிரபுசாலமனின் வார்த்தைக்கு பெரிய அளவு மரியாதை கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் பிரபுசாலமன் அமலாபாலை படத்தின் ஒத்திகைக்கு வர சொல்லி உள்ளார். அப்போது அவர் முழு மேக்கப்போடு வந்துள்ளார். இதனை பார்த்துவிட்டு பிரபுசாலமன் முழு மேக்கப்போடு வரவேண்டாம் எனக் கூறியுள்ளார். வீட்டிற்கு போய் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை பிரபு சாலமனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பிரபுசாலமன் உடனே மைனா படத்தின் கதாநாயகி நீங்கள்தான் எனக்கூறி அனன்யாக்கு கொடுக்க வேண்டிய பட வாய்ப்பை அமலாபாலுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் முதலில் பெரிய அளவு பிரபுசாலமனின் வார்த்தைக்கு மரியாதை கொடுக்காமல் இருந்த அனன்யா. அதன்பிறகு சார் ஏதோ ஒரு கதாபாத்திரம் இருக்குன்னு சொன்னீங்களே என கேட்டுள்ளார்.

அதற்கு பிரபுசாலமன் இப்போதைக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை அந்தப் படத்திற்கான கதாபாத்திரத்தை வேறு ஒரு நடிகையிடம் கூறி விட்டேன். அவர்களும் சம்மதித்து விட்டார்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார்.

Trending News