சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இயக்குனரை பங்கமாய் கலாய்த்த மிஷ்கின்.. இவர் படத்தை பார்த்தாலே நான் தூங்கிடுவேன்

Director Myskin: சர்ச்சைக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாத இயக்குனர் யார் என்றால் அது மிஸ்கின். தான் சும்மா இருக்க நினைத்தாலும் வாயை அடக்க முடியாது என்று சொல்பவர்கள் லிஸ்டில் முதல் ஆளாக இருக்கக்கூடியவர். இதுதான் இவருடைய பெரிய மைனஸ் பாயிண்ட் என்று சொல்லும் அளவிற்கு பொது இடங்களில் எப்படி என்ன பேச வேண்டும் என்று தெரியாமலேயே வார்த்தையை விலாசக் கூடியவர்.

அப்படிப்பட்ட இவர் இயக்குனர் ஒருவரை பங்கமாக கலாய்த்து பேசி இருக்கிறார். முக்கியமாக அவர் எடுக்கக்கூடிய படங்களை கிண்டல் அடித்திருக்கிறார். அதாவது அவர் படத்தை பார்த்தாலே தூக்கம் வந்துவிடும். அந்த அளவிற்கு ரொம்பவே ஸ்லோவாக படத்தை ஓட்டிக்கொண்டு வருபவர் என்று கூறி இருக்கிறார்.

Also read: மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கவுள்ள மிஸ்கின்.. வில்லன் நடிகரை வைத்து படம் பண்ண வந்த தைரியம்

இவர் கலாய்த்தது எந்த இயக்குனர் என்றால் குடும்பங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் சேரனை தான். பொதுவாக இவர் எடுக்கக்கூடிய படங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் இருக்கும். முக்கால்வாசி இவருடைய படங்கள் சூப்பர் ஃபீல் ஹூட் மூவியாக இருக்கும். அந்த வகையில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களை எதார்த்தமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

மேலும் ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிப்பதற்கு விஜய்யிடம் தான் கதை சொல்லி இருக்கிறார். அவருக்கும் கதை ரொம்பவே பிடித்து போய் நான் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் கால் சீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்னரே அந்த கேரக்டரில் அவரே நடித்து வெற்றியடைய செய்திருக்கிறார்.

Also read: நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

அப்படிப்பட்ட இவரை அசிங்கப்படுத்தி, மேடையில் அநாகரிகமாக அவன் இவன் என்று கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் பேசி வந்திருக்கிறார். இவருடைய குணம் இப்படி தான் என்றாலும் எல்லா விஷயத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது. பார்க்கிறவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்ட சேரனுக்கு எப்படி இருந்திருக்கும்.

ஆனாலும் இதை கேள்விப்பட்ட சேரன் பெருந்தன்மையாக மிஸ்கினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது அவர் எடுக்கக்கூடிய படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த வகையில் அவர் மீது ரொம்பவே நான் மரியாதை வைத்திருக்கிறேன். அது என்னைக்கும் என்னிடம் இருந்து போகாது. என்னைப் பற்றி அவர் விமர்சித்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கிறார்.

Also read: என்ன கேவலமா கூட படத்துல காட்டிக்கோ.. விளம்பரத்திற்காக மேடையில் கூச்சநாச்சம் இல்லாமல் பேசும் மிஸ்கின்

Trending News