திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லோகேஷ்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உடைத்த மிஷ்கின்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்திற்கு இப்போது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அவ்வப்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை பட குழு அறிவித்து வந்தாலும் முக்கிய ரகசியங்களும் சில சமயங்களில் மீடியாவில் கசிந்து விடுகிறது. அப்படித்தான் தற்போது இயக்குனர் மிஷ்கின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

அதாவது இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஏகப்பட்ட இயக்குனர்கள், நடிகர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் நடித்து வருகிறது. அந்த வகையில் மிஷ்கினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அதன் காரணமாகவே இப்போது அவர் போகும் இடம் எல்லாம் லியோ படம் பற்றிய பல விஷயங்களை ஓப்பனாக கூறிவிடுகிறார்.

Also read: விஜய்யால் குடியை மறந்த வெங்கட் பிரபு.. விக்னேஷ் சிவன் போல் தூக்கி எறிந்து விடுவார் என்ற பயம்.!

அந்த வகையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ஒரு ட்விஸ்ட்டை இவர் வெளிப்படையாக உடைத்துள்ளார். அதாவது கிளைமாக்சில் இவரும் விஜய்யும் சண்டையிடுவது போல் ஒரு காட்சி இருக்கிறதாம். அப்போது இவரை அடிப்பதற்கு தயங்கிய விஜய் நான் அண்ணனை அடிக்க மாட்டேன் என்று கூறினாராம்.

அதற்கு லோகேஷ் கூட சரி வேறு ஏதாவது செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உடனே மிஸ்கின் அதெல்லாம் வேண்டாம் அடிங்க என்று சொல்லியும் விஜய் கேட்கவில்லையாம். அப்புறம் எப்படியோ அவரை சம்மதிக்க வைத்து அந்த காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.

Also read: மரண பயத்தை காட்டிய விக்னேஷ் சிவன்.. வாலை சுருட்டி கொண்டு பம்மும் வெங்கட் பிரபு

இதை தற்போது அவர் கூறி இருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் மிஷ்கின் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்பதையும் தெளிவு படுத்தி இருக்கிறது. இப்படி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் இவர் பேசி வருவது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

அது மட்டும் இன்றி லோகேஷ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல் இவரை போய் நடிக்க வைத்திருக்கிறாரே என்றும் கூறி வருகின்றனர். மேலும் படம் ரிலீஸ் ஆகும் வரை இவருடைய வாய்க்கு பூட்டு போடுங்கள் இல்லை என்றால் மொத்த கதையையும் உளறி கொட்டி விடுவார் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.

Also read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

Trending News