இந்த சீசனில் இயக்குனர்கள் கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் பேய் படங்களையே கையில் எடுக்கின்றனர். பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது.
காஞ்சனா முதல் அரண்மனை வரை நகைச்சுவை கலந்த பேய் படங்களை கொடுத்து மக்களை எளிதாக கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் மிஸ்கினின் பிசாசு படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
பிசாசு வெற்றியைத் தொடர்ந்து மிஸ்கின் எடுத்து வரும் படம் பிசாசு- 2. இந்த படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்த படம் மக்களுக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் என மிஷ்கின் தனது பேட்டியில் கூறிவருகிறார்.
இந்த படத்தில் சில முக்கியமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இந்த கிராபிக்ஸ் வேலைகளை “KGF-2” படத்திற்கு கிராபிக்ஸ் ஒர்க் பண்ணிய குழு தயாரித்து வருகிறது. அவர்கள் பெங்களூரில் இருந்து இந்த வேலைகளை கவனித்து வருகின்றனர்.
அவர்கள் செய்த கிராபிக்ஸ் வொர்க் மிஷ்கினுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று தெரிகிறது. மிஸ்கின் அது சரியில்லை, இது சரியில்லை என இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறாராம். இதனால் வேலையும் இழுத்துக்கொண்டே செல்கிறது, படத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை.
பிசாசு படத்திற்கு மிஸ்கின் ரொம்ப பெர்பெக்சன் எதிர்பார்க்கிறாராம். அதனால் தான் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் இன்று வரை இழுத்துக் கொண்டே செல்கிறது.