மிஷ்கினின் இயற்பெயர் சண்முகராஜா. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை இயக்கி வருபவர் மிஸ்கின். இவர் 1971 செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தவர். மிஸ்கின் திரைப்பட இயக்குனர் திரைக்கதை, எழுத்தாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.
மிஸ்கின் 2006ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, முகமூடி , துப்பறிவாளன், சைக்கோ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
மிஸ்கின் அடுத்ததாக பிசாசு இரண்டாம் பாகம் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா,அஜ்மல் நடித்து வருகிறார்கள். அஜ்மல் மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் நடித்துள்ளார். அப்படம் அஜ்மலுக்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது. பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிஷ்கினுக்கு அஞ்சாதே படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் அவார்ட் மற்றும் 2009இல் அஞ்சாதே படத்திற்கும் 2015இல் பிசாசு படத்திற்கும் சிறந்த இயக்குனருக்கான விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மிஷ்கினுக்கு பல திரைத்துறையினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பன்முகத் திறமை கொண்ட மிஷ்கினுக்கு சினிமா பேட்டை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.