AR Raghuman: 90களில் இருந்து இப்போது வரை இளசுகளின் மனதைக் கவரும் பாடல்களை தந்த ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவின் ஆஸ்கார் நாயகனாகவும் பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்டவரின் மீது கருப்பு புள்ளியாய் சமீபத்தில் நடந்த ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி அமைந்துவிட்டது. இதில் ரசிகர்களுக்கு போதிய வசதிகளை பெற்று தராமல் அளக்களித்ததாக சோசியல் மீடியாவில் பலரும் கொந்தளித்தனர். ஆனால் பல முன்னணி பிரபலங்கள் இவருக்கு உறுதுணையாக நின்று அந்த பிரச்சினையை ஒரு வழியாக முடித்தனர். இப்போது இசை புயல் சைக்கோ இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார்.
பிசாசு, சைக்கோ போன்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களை இயக்கி ஃபேமஸ் ஆனவர்தான் மிஸ்கின். இவர் சமீப காலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் முரட்டு வில்லனாக நடித்து மிரட்டி விட்டார்.
இப்போது மறுபடியும் படங்களை இயக்குவதற்கு மும்முரம் காட்டுகிறார். அதைவிட இப்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். பொதுவாக மிஸ்கின் இளையராஜாவை தனது குருவாகவே நினைத்து அவர் புகழ் பாடி வந்தார்.
தற்பொழுது தானோ தயாரிக்கும் படத்தை மிஸ்கின் இயக்குகிறார், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போகிறார். மிஸ்கினை இளையராஜாவே சமாளிக்க முடியாது, ஏஆர் ரகுமான் எப்படி சமாளிக்க போகிறாரோ என்று தெரியவில்லை.
மிகவும் சாதுவாக இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் இப்போது சனியனை தூக்கி பனியன்ல போட்டுகிட்ட கதையாய் இந்த படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். மிஸ்கின் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வம்பு இழுக்காமல் விடமாட்டார் அந்த படத்தில் இருக்கும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என எல்லாரையும் ஒரு வழி ஆக்கி விடுவார்.
Also Read: ஏஆர் ரகுமான் போல் என்னால் அசிங்கப்பட முடியாது.. லோகேஷுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்
இதனால் இவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும். ஆனால் மிஸ்கின் தன்னுடைய குருவாக பார்க்கக்கூடிய இளையராஜாவிடம் மட்டும் வாலை சுருட்டி கொண்டு இருப்பார். இப்போது குருவை கழட்டிவிட்டு தன்னுடைய சொந்த படத்தில் ஏ ஆர் ரகுமானின் மிஷ்கின் லாக் செய்திருக்கிறார்.
ஒருவேளை இளையராஜா தற்போதைய ட்ரெண்டிக்கு ஏற்ப பாடலை இசையமைக்க மாட்டாரோ என்ற தயக்கம் மிஸ்கினுக்கு தோன்றியிருக்கிறது. ஆனால் இனிமேல் மிஸ்கின் கூப்பிட்டாலும் இளையராஜா இசை அமைக்க வரமாட்டார் என்று நன்றாக தெரிகிறது. அதே சமயம் இந்த படத்தை முழுசாக ஏஆர் ரகுமான் மிஸ்கினுடன் இணைந்து முடிப்பாரா அல்லது தலை தெறிக்க ஓடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: மறக்க முடியாமல் போன மறக்குமா நெஞ்சம்.. ஏ.ஆர் ரகுமானுக்கு வக்காலத்து வாங்கும் பிரபலங்கள்