புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீன் குழம்புக்காக பொய்யாக நடித்த மிஷ்கின்.. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்ல.!

மிஷ்கின் மேடையில் பேசும் ஒவ்வொரு விஷயமுமே சர்ச்சையாக வெடிக்கும். இவ்வாறு அவருடைய பேச்சு தான் இப்படி இருக்கிறது என்றால் அவர் செய்த செயல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இப்போது பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தை இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஏஜிஎஸ் நிறுவனம் சேரன் இயக்கத்தில் ஒரு படம் பண்ண கூப்பிட்டு இருக்கிறார்கள். அப்போது சேரன் இந்த படத்தை மிஷ்கின் இயக்கினால் வித்தியாசமாக இருக்கும் நான் வேண்டுமானால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Also Read: 3 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின்.. நண்பனுக்காக களம் இறங்கும் ஹீரோ

அதன்படி உருவான படம் தான் யுத்தம் செய். மேலும் இந்த படத்தின் பேச்சு வார்த்தைக்காக ஒரு முறை சேரன் வீட்டுக்கு மிஷ்கின் சென்று இருக்கிறார். அன்று மதியம் சேரன் மனைவியின் கையால் மீன் குழம்பு சாப்பிட்டு இருக்கிறார். அப்போது இதே போன்ற ஒரு மீன் குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை அண்ணி என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இன்னும் எக்கச்சக்கமாக புகழ்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதேபோன்று மீன் குழம்பு செய்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். சேரன் மனைவியும் மிஷ்கின் இவ்வாறு வெளிப்படையாக கேட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சேரன் படப்பிடிப்புக்கு செல்லும் போது மீன் குழம்பு செய்து கொடுத்திருக்கிறார்.

Also Read: மேடையில் கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்.. தத்துவம் சொல்றேன்னு பெயரைக் கெடுத்துக் கொண்டு செய்யும் அக்கப்போரு

அதையும் மிஷ்கின் நன்றாக ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் யுத்தம் செய் படத்தின் படப்பிடிப்பு என்று முடிந்ததோ அன்றிலிருந்து சேரன் மற்றும் அவரது மனைவியை பார்க்க மிஷ்கின் போகவில்லையாம். அதோடு மட்டுமல்லாமல் சேரனிடம் போனில் கூட பேசவில்லையாம். மீன் குழம்புக்காக மிஷ்கின் இவ்வாறு பொய்யாக நடித்துள்ளார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போல மிஷ்கின் விருப்பப்பட்டு கேட்டதால் ஆசை ஆசையாக சேரனின் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவர் நன்றி கடனாக எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் சாதாரணமாக போன் செய்து அடிக்கடி நலம் விசாரித்தாலே அதுவே அவரை ஒரு நல்ல மனிதராக நிலை நிறுத்தி இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஊருக்கு உபதேசம் செய்யும் மிஷ்கின் தன் விஷயத்தில் அதெல்லாம் பார்ப்பதில்லை.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லோகேஷ்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உடைத்த மிஷ்கின்

Trending News