ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

என்ன கேவலமா கூட படத்துல காட்டிக்கோ.. விளம்பரத்திற்காக மேடையில் கூச்சநாச்சம் இல்லாமல் பேசும் மிஸ்கின்

Myskin: இயக்குனர் மிஷ்கின் மேடை ஏறி மைக் பிடித்தாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்று தான் அர்த்தம். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை இஷ்டத்துக்கும் பேசி சம்பந்தமில்லாத ஆட்களை வம்புக்கு இழுப்பதை போல, இவரும் வம்பில் சிக்கிக் கொள்வார். அப்படித்தான் இப்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வான்டட் ஆக சென்று சில கண்டன்டுகளை கொடுத்து மீடியாவை பரபரப்பாக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் அடியே படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் இயக்குனர் மிஸ்கினும் நடித்திருக்கிறார்.

Also Read:அந்த ஈகோ புடிச்சவனுக்கு மயி** கூட படம் பண்ண மாட்டேன்.. மீண்டும் பொதுவெளியில் அசிங்கமாக பேசிய மிஸ்கின்.!

இந்த விழாவில் வழக்கம் போல மேடை ஏறிய மிஸ்கின் ஏகத்துக்கும் கெட்ட வார்த்தையும் அளந்துவிட்டார். மேலும் ஜிவி பிரகாஷ் பற்றி பேசும்பொழுது இரட்டை அர்த்தம் கொண்ட வசனம் ஒன்றை பேசி முகம் சுளிக்க வைத்தார். மேலும் என்னை படத்தில் எப்படி வேண்டுமானாலும் காட்டிக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார். படம் எடுத்து இனி சம்பாதிக்க வழி இல்லை என்பதை புரிந்து கொண்ட மிஸ்கின் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இப்படி மறைமுகமாக இப்படி அழைப்பு விடுத்திருக்கிறாரா என தெரியவில்லை.

மேலும் பேசிய அவர், இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஏதாவது ஒரு கேரக்டருக்கு பெயர் வைத்தால் கூட அதை பெரிதாக பேசி இயக்குனர் மீது வழக்கு வரை போட்டு விடுகிறார்கள். இது போன்ற பிரச்சனைகளில் சமீப காலமாக இயக்குனர்கள் அதிகமாக சிக்கி வருகிறார்கள். நான் இயக்க இருக்கும் ஒரு படத்தின் கேரக்டருக்கு இளையராஜா என்று பெயர் வைக்க வேண்டும் என எனக்கு ஆசை.

Also Read:24 மணி நேரமும் தம் அடித்து உடம்பை கெடுத்துக் கொண்ட 5 இயக்குனர்கள்.. ரயில் வண்டியை போல் புகையை ஊதி தள்ளிய மிஸ்கின்

ஆனால் அந்தப் பெயரை வைத்தால் இளையராஜா கண்டிப்பாக என் மீது கேஸ் போடுவார். அதனால் அந்த கேரக்டருக்கு யுவராஜ் என வைத்து விட்டேன் என்று கொஞ்சம் சர்ச்சையை கிளப்பிய படி பேசிய மிஸ்கின், உடனே இளையராஜா என் அப்பா போன்றவர் என சொல்லி அந்த கண்டன்ட்டை அப்படியே பூசி மொழுகி விட்டார்.

சமீபகாலமாக இயக்குனர் மிஸ்கின் படம் இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். லியோ படத்தில் தளபதி விஜய் உடன் நடித்திருக்கும் இவர், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திலிருந்து ஒரு நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் நடிக்க வந்த பிறகு ரசிகர்களின் அதிக ஆதரவு இவருக்கு கிடைத்தது. இப்படி மேடை ஏறி எக்குத்தப்பாக பேசி ஆதரவை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

Also Read:மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி

Trending News