வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிசாசு-2 பார்த்து மிரண்டு போன பிரபலம்.. மிஷ்கினிடம் மீண்டும் வாய்ப்பு கேட்ட சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மற்ற இயக்குனர்கள் போல் படத்தை இயக்காமல் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதன்மூலம் படத்தில் தனது திறமையை வெளிப்படுத்திருப்பார்.

மிஸ்கின் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு தனியாக தெரிந்துவிடும். அந்த அளவிற்கு கதைக்களமும், படக்காட்சிகளும் வித்தியாசமான படமாக்கப்பட்டிருக்கும். தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதனால் தற்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் படக்குழுவினர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அப்போது ஆண்ட்ரியா இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறினார். மேலும் ஆண்ட்ரியா கிட்டத்தட்ட 15 நிமிடம் நிர்வாண காட்சி நடித்துள்ளதாக மிஸ்கின் கூறினார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

மிஸ்கின் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அனைவரிடமும் கோபம் காட்டுவார். இதனால் பல பிரபலங்களும் மிஸ்கின் கோபப்பட்டதாக பலமுறை கூறி உள்ளனர். இதற்கு மிஷ்கினும் சொன்னதை செய்யாவிட்டால் கோபம் வராமல் என்ன செய்யும் என பலருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் பிசாசு 2 படத்தில் நடித்த பலரும் மிஷ்கின் ஒரு நல்ல மனிதர் தங்களிடம் அன்பாக நடந்து கொண்டார் எனக் கூறி வருகின்றனர்.

இப்படியிருக்கும் போது பிசாசு 2 படத்தின் தயாரிப்பாளர் மிஸ்கின் சொன்னபடியே குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து மிரண்டு விட்டாராம். இதனால் மிஸ்கின் இயக்கும் அடுத்த படத்தையும் தான் தயாரிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு மிஷ்கினும் சம்மதித்துள்ளார். இதனால் இவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும் என பலரும் கூறி வருகின்றனர்.

mysskin-aandrea-movie-photos-pisasu-stills
mysskin-aandrea-movie-photos-pisasu-stills

Trending News