ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டங்குவாரை பிதுக்கிய மிஷ்கின்.. விஜய் சேதுபதியால் மொத்த யூனிட்டும் போடும் கோவிந்தா

Mysskin overtime work on Vijay Sethupathi starrer Train shooting spot: தமிழ் சினிமாவில் புதுமையான திரைக்கதையுடன் இயக்குனராக தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படத்திலிருந்து ஆரம்பித்து பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ வரை பல வெற்றி படங்களை இயக்கியவர். தொடர்ந்து கடந்த சில வருடங்களாக நடிகனாக தன் திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார்

தயாரிப்பாளர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை பெற்று இருந்தும் இயக்குனராக தன் படைப்பை முன்னிறுத்துவதிலேயே ஆர்வமுடன் இருந்து வருகிறார் மிஷ்கின். இவருடைய படத்தில் நடிக்கும் நடிகர்களோடு சில முரண்பாடுகள் ஏற்பட்ட வகையில் இயக்கத்திற்கு விடுமுறை கொடுத்து மூன்று ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்து வந்தார்

இந்நிலையில் முதன்முறையாக விஜய் சேதுபதி தனது நண்பன் மிஷ்கினுக்காக நட்பு முறையில் படம் இயக்குவதற்கு கால்ஷீட் கொடுத்து உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி, டிம்பிள் மற்றும் மிஷ்கின் கூட்டணியில் உருவாக்கி வரும் படமே ட்ரெயின். ரயிலில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வருகிறது மிஷ்கினின் ட்ரெயின்.

Also read: மிஷ்கினின் பைத்தியக்காரத்தனமான பேச்சு.. போரடிச்சு போச்சு என் மனைவி எனக்கு வேண்டாம்! கழுவி ஊத்தும் பயில்வான்

வழக்கமாக படப்பிடிப்பு ஆறு மணிக்கு துவங்கி நாலு அல்லது எட்டு மணிக்குள் முடித்து விடுவது வழக்கம். ஆனால் ட்ரெயின் பட சூட்டிங்  எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி நாள் முழுவதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அதாவது ஆறு மணிக்கு துவங்கும் சூட்டிங் 10 மணிக்கு முடிக்கப்படும் என சொல்லி இரவு இரண்டு மணி வரை ஷூட்டிங் போகுதாம் எல்லாத்துக்கும் காரணம் விஜய் சேதுபதி மட்டும் தானாம்.

 முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தனது தொழில் கொள்கையை மாற்றி வில்லனாக நடிக்க மாட்டேன் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து ஒரே நேரத்தில் மூன்று படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பார்ட் 1 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு விடுதலை 2 படத்தில் அதிக காட்சிகளுடன் அதிக அழுத்தத்துடன் உள்ள கேரக்டராம். இதற்காக மெனக்கெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி

அதேபோலவே மகாராஜா என்ற ஆக்சன் திரில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளதால் அதற்கு டப்பிங் பணிகள் நடந்து வருகின்றனவாம். டப்பிங் பணிகளுக்கு இடையே சூட்டிங் நடைபெறுகிறது. விஜய் சேதுபதியின் சௌகரியத்திற்காக படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் எடுத்து சூட்டிங் நேரத்தை இழுத்துக் கொண்டே போகிறார்களாம். விஜய் சேதுபதியால் திரைப்படத்தின் மொத்த பட குழுவினரும் அல்லாடி தள்ளாடி வருகின்றனர்.

Also read: மரண மொக்க இயக்குனருடன் மீண்டும் கூட்டணியில் விஜய் சேதுபதி.. பழக்கத்திற்காக எடுக்கப் போகும் மிகப்பெரிய ரிஸ்க்

Trending News