திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கும் மிஷ்கின்.. அந்த பட சாயலில் ஒரு திரில்லர் கதை ரெடி

பேய்களையும் தேவதையாக காட்டிக் கொண்டிருக்கும் மிஸ்கின் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் மிஷ்கின் விஜய் சேதுபதியுடன் ரணகளம் செய்வதற்காக, இவருடைய முந்தைய படங்களின் சாயலில் ஒரு திரில்லர் கதையை தயார் செய்து வைத்திருக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளது.

 Also Read: வாடி, போடி என உரிமையோடு கூப்பிட்ட மிஷ்கின்.. தாராளமா காட்டுவதற்கு கோடியில் சம்பளம்

இதில் விஜய் சேதுபதி முக்கிய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அப்போது மிஷ்கினும் விஜய் சேதுபதியும் மிக நெருங்கிய நண்பர்களாக மாறினர். அது இன்று வரை தொடர்ந்து வருகிறது. சில வருடங்களாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணுவேன்.

அதற்காக கதை தயார், விஜய் சேதுபதி ஃப்ரீ ஆனதும் ஆரம்பித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டே வந்தார். தற்போது விஜய் சேதுபதியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 Also Read: விஜய்க்காக சொம்படிக்கும் மிஷ்கின்.. உங்க முதுகு அழுக்கை துடைச்சிட்டு அடுத்தவனுக்கு பாலிஷ் போடுங்க!

இந்த படத்தை முடித்தவுடன் மிஷ்கினின் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். மிஸ்கினும் பிசாசு 2 படத்தை வெளியிட்ட பின், தற்போது விஜய் சேதுபதியும் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டால், அந்த படத்தை துவங்கி விடுவார்களாம்.

இந்த படம் திரில்லிங் கலந்த ஆக்சன் கதையாக இருக்கும். அதாவது மிஷ்கின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான அஞ்சாதே பட சாயலில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிஷ்கின்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாக்க உள்ள இந்த திரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிசாசு 2 படத்தை விட மிஞ்சி இருக்கிறது.

Also Read: உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

Trending News