வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

கறிவேப்பிலை கொத்தமல்லியா மாறிய நெல்சன் ஜூனியர் என்டிஆர்.. விதிவிலக்கா அஜித் பண்ணும் அட்ராசிட்டி

லைக்கா, ஏ ஜி எஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது மைத்திரி மூவி மேக்கர்ஸ். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவர்கள் பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே கூறி வைக்கிறார்கள். பல புதிய திட்டங்களை போட்டு ஹீரோக்களையும், இயக்குனர்களையும் கைவசப்படுத்திக் கொள்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு முதல் சினிமா படங்களை தயாரித்து வருகிறார்கள். இதுவரை 20க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களை மட்டுமே தயாரித்த இவர்கள் இப்பொழுது தமிழ் படங்களையும் குறிவைக்க தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் சினிமா தயாரிப்பில் இறக்கி உள்ளனர்.

இவர்கள்தான் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்கள். கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. தமிழிலும் அடுத்தடுத்த படங்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை வளைத்துப் போட்டுள்ளனர. ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு நெல்சன், ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

இவர்கள் கூட்டணியில் உருவாக போகும் படமும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க போகிறார்கள். அந்த படத்திற்கு முதற்கட்ட அட்வான்ஸ் ஆக இருவருக்கும் 50 கோடிகள் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் கருவேப்பிலை கொத்தமல்லி போல் கொடுத்தாலும் அதன் பிறகு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும் திட்டம் போட்டுள்ளனர்.

படம் வெளிவந்த பிறகு கிடைக்கும் லாபத்தில், சதவீத அடிப்படையில் நெல்சன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் பங்குகளை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதுதான் இவர்களது பாலிசி, ஆனால் அஜித் மற்றும் அதற்கு நேர் மாறாக இருக்கிறார். மாதம் அவருக்கு 5 கோடிகள் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடன் அஜித் போட்ட அக்ரிமெண்ட்.

Trending News