திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாமியாருக்காக அந்நியனாக மாறப்போகும் சக்தி.. குணசேகரனை விட கொடூரமாக மாறிய நாச்சியப்பன் 

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது சக்தி ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்று பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறார். அதாவது இத்தனை நாளாக புள்ள பூச்சியாக இருந்த சக்திக்கு தற்போது தான் சரியான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது என்பதற்கு ஏற்ப எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து வருகிறார்.

அந்த வகையில் தன் மாமியார் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது வீட்டிற்கு கூட்டிட்டு வந்து அடைக்கலம் கொடுத்தது மட்டுமல்லாமல் மற்ற யாரையும் தவறாக பேசவிடாமல் வாயடைத்து விடுகிறார். இதனை தொடர்ந்து வருகிற எலெக்ஷனில் குணசேகரன் தோற்று ஈஸ்வரி ஜெயிக்க போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் கொஞ்சம் கதிர் மனதிலும் தன் பொண்டாட்டி நந்தினி என்கிற பாசம் வந்துவிட்டது.

இதற்கிடையில் கரிகாலனை கல்யாணம் பண்ணும் சூழ்நிலை வந்தால் நான் வேறு ஒரு முடிவு எடுப்பேன் என்று தர்ஷினி மறைமுகமாக பேசிக் கொண்டு வருகிறார். இவர் எடுக்கப் போகும் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது. குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இருந்தால் இன்னும் நன்றாகவே இருக்கும்.

Also read: ரோகிணியின் முகத்திரையை கிழிக்க போகும் மருமகள்.. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து படும் அவமானம்

அடுத்தபடியாக நாச்சியப்பன் குடும்பத்தில் பேசுவதை பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. நேற்று காதலித்து கல்யாணம் பண்ணிய ஜோடிகளை பிரிப்பதாக நினைத்து ஒவ்வொரு மட்டமான வேலைகளையும் செய்து வருகிறார்கள். கிட்டத்தட்ட கல்யாணம் பண்ணி 35 வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது நாச்சியப்பனையும் பார்வதியும் பிரித்து வைத்து வேடிக்கை காட்டுகிறார்கள்.

போதாக்குறைக்கு நாச்சியப்பனின் அக்காவும் அம்மாவும் குணசேகரன் வீட்டிற்கு வந்து பார்வதியை தாலியை கழட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். இதுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல தான் இந்த ஒரு விஷயம் தேவையில்லாத ஆணியாக இருக்கிறது. ஜீவானந்தம் என்னாச்சு, அப்பத்தா நிலைமை என்ன, ரேணுகா நந்தினி எடுத்த முயற்சி பாதியிலேயே நின்னு போய்விட்டது.

இப்படி கதைக்கு சம்பந்தமான நிறைய விஷயங்கள் இருக்கும் பொழுது, நாடகத்தையே திசை திருப்பும் வகையில் புதுப்புது கேரக்டர்களை கொண்டு வந்து புரியாத புதிராக கதை நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் தேவையில்லாமல் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் கேரக்டரும் வெத்துவேட்டாக இருப்பது நாடகத்தின் மேல் இருக்கும் சுவாரஸ்யத்தை குறைக்க செய்கிறது.

Also read: தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்

Trending News