வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

54 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் நதியா..

பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று விட்டார். ரஜினி, சத்யராஜ், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நதியா 1980களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்கா சென்று விட்டார். இறுதியாக 1994ஆம் ஆண்டு பிரபுவின் 100வது படமான ராஜகுமாரன் படத்தில் நடித்த நதியா அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்பவும் பிஸி நடிகையாக வலம் வரும் நதியா சற்றும் மார்க்கெட் குறையாமல் தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.

தற்போது 54 வயதாகும் நதியாவிற்கு இப்போதும் மார்க்கெட் குறையாமல் இருப்பதற்கு காரணம் அவரது ஃபிட்னஸ், அழகு மற்றும் இளமை தோற்றம் தான். தான் தொடர்ந்து உடற்பயிற்சி, யோகா செய்து, மகிழ்ச்சியாக இருப்பது தான் எனது இளமை தோற்றத்திற்கு காரணம் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை நதியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வழக்கமாக உடற்பயிற்சி செய்வது உடல், மனம், ஆன்மாவிற்கு தரும் கவுரவம் என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

Trending News