சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சினிமா சங்கங்கள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் போனதுக்கு காரணமே இளையராஜாதான்.. அம்புட்டும் உண்மையாம்

இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் இளையராஜா. இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசியப்படுத்தி வைத்துள்ளார். கடந்த வருடம்  ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடிகர் சங்கம் விஷால் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மாநிலங்களிலும் இருந்து சினிமா பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்று விஷால் நடிகர் சங்கத்தின் மூலம் பல கோடிகளை இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பளமாக இளையராஜாவிற்கு பல கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் தான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் திவாலானது முக்கிய காரணமாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி கொள்கின்றனர். தற்போது வரை அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியவில்லை.

nadikar-sangam
nadikar-sangam

இது ஒரு புறமிருக்க இசையமைப்பாளர் சங்கத்தை இளையராஜா இலவசமாக கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதியும் கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது பொய்யான வாக்குறுதியாகவே இருக்கிறது.

கோடம்பாக்கத்தில் தனது சொந்த செலவில் ஒரு புதிய ஸ்ட்டியோ ஒன்றை திறந்து வைத்துள்ளார். அதற்கு முதல் முறையாக வெற்றிமாறனின் படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இதில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சூரி மற்றும் இளையராஜா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அன்றைய தினத்தில் இவர் அளித்த பேட்டியில் புகழ்பெற்ற பல ஸ்டூடியோக்கள் தற்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. அந்த லிஸ்டில் பிரசாத் ஸ்டூடியோ விரைவில் இணையும் என்பது போன்ற சாபத்தை கொடுத்துவிட்டார்.

nadikar-sangam-1
nadikar-sangam-1

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் சினிமாத்துறைக்கு என்று எதுவுமே செய்யவில்லை என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் புகாராக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற ஸ்டூடியோவை சொந்த ஸ்டுடியோவாக நினைத்து பல வருடங்களாக கழித்து வந்த இளையராஜா இப்படி ஒரு சாபம் கொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது யாருக்குத் தெரியும், இனியாவது சினிமா துறையில் தன்னுடன் பயணிக்கும் பிரபலங்கள், இயக்குனர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தனது புதிய ஸ்டூடியோவில் மரியாதை கிடைக்கும் என்று நம்புகின்றனர் இந்த கோலிவுட் வட்டாரம்.

Trending News