பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போட்டியாளர் பங்கேற்று வருகிறார். சென்ற சீசனில் மலேசிய பிரபலமான முகேன் கலந்து கொண்டு, பிறருக்கு டஃப் கொடுத்து வெற்றியாளர் ஆவார். அதேபோல் இந்த பிக் பாஸ் சீசன்5-ல் மலேசியாவின் பிரபல நடிகையும், தமிழகத்திற்கு டிக் டாக் மூலம் அறிமுகமான நாடியா சாங் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு நாடியாவை போட்டியாளராக அழைத்தபோது அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடியா தனது சொந்த பணத்தை அதிகளவில் செலவு செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய மலேசியா நபரான நாடியா சாங், பிக் பாஸ் வீட்டில் வெற்றியை பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக முதல் எலிமினேஷன் ரவுண்டில், குறைவான ஓட்டு பெற்றதன் காரணத்தின் அடிப்படையிலும், கன்டன்டே தராத கன்டஸ்டன்ட் ஆக இருந்ததால், நாடியா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறினால் அவ்வீட்டில் நடக்கக்கூடிய ரகசியங்களும், பிற போட்டியாளர்களை பற்றிய முக்கியமான தகவல்களும் கிடைக்கப் பெறும் என்பதால் வெளியேறக்கூடிய போட்டியாளரை பேட்டி எடுப்பது வழக்கம். அது போல் இவரையும் பேட்டி எடுத்தபோது, இவரின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தங்களின் மனக்குமுறல்களை கொட்டி தீர்துள்ளனர்.
அதாவது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியாவில் இருந்து தமிழகம் வந்தது, இங்கு தங்கியிருந்தது, நாடியாவிற்கு தேவையான பொருட்கள் வாங்கியது என பல்வேறு செலவுகளை தனது சொந்த பணத்தினால் செலவு செய்துள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். பிக்பாஸில் இருந்து தரக் கூடிய வருமானத்தை காட்டிலும் நாடியாவிற்கு ஆகிய செலவு அதிகம் என்று தனது மனக்குமுறல்களை தெரிவித்தார் நாடியாவின் சகோதரர்.
மறுபக்கம், நாடியாவின் கணவர் சாங், நாடியாவிற்காக ஓட்டு போட முயன்றபோது மலேசியாவிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டு போடுவதற்கான எவ்வித வசதியும் பிக்பாஸ் குழு செய்யவில்லை என்றும், என் மனைவிக்கு நான் வாக்களித்ததே தமிழகத்தில் இருக்கக்கூடிய உறவினரின் தொலைபேசி எண்ணை வைத்து தான் லாகின் செய்து வாக்களித்தேன் என்றும் கூறியுள்ளார்.
மலேசியாவில் பிரபலமடைந்த எனது மனைவியை இங்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் தங்களின் ஆதரவை வாக்கு மூலம் தெரிவிக்க முடியாமல் போனதை பிக்பாஸ் குழு கவனத்தில் கொண்டு மறு முறை வேறு போட்டியாளருக்கு இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது கருத்தினை வெளிப்படையாக கூறியுள்ளார் சாங்.