தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் சமந்தா. அதன்பிறகு இவர் நான் ஈ படத்தின் மூலம் பெரிய வரவேற்பு பெற்று தமிழ் சினிமாவில் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
எப்போதும் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள் என்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால் சமந்தா சினிமாவில் பிரபலமாக இருக்கும் போது தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நாகசைதன்யா இதுவரைக்கும் தமிழில் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் இணைந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகின்றனர்.
சினிமாவை பொருத்தவரை நடிகைகளுடன் ஏதாவது ஒரு நடிகர் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அதையே பெரிய சர்ச்சையாகி விடுவார்கள்.
அப்படி நாக சைதன்யாவிடம் ராசி கண்ணா சூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமாக புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இதனை ராசி கண்ணா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் பலரும் சமந்தாவை விட இவர் நெருக்கமாக உள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.