Sobhita: நடிகை சோபிதாவுக்கும், தெலுங்கு சினிமா உலகத்தின் பெரிய குடும்பத்து பையன்னான நாக சைதன்யாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சோபிதா தூலி பாலாவின் முன்னாள் காதலர் யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நாக சைதன்யா, சமந்தா ஜோடி ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. திருஷ்டி பட்டது போல் இந்த அழகிய காதல் ஜோடி திருமண உறவில் இருந்து விலகி விட்டார்கள்.
முன்னாள் காதலர் யார் தெரியுமா?
விவாகரத்து அறிவித்த போதே இதற்கு சோபிதா தான் காரணம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது. வதந்திகள் எல்லாம் உண்மையாகும் வகையில் இருவரும் திருமண அறிவிப்பை வெளியிட்டார்கள். சோபிதாவுக்கு நாக சைதன்யாவுக்கு முன்னமே உறுதியான காதல் ஒன்று இருந்திருக்கிறது.
![Sobhita with her ex](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/11/sobhita-dhulipala-love-with-fashion-designer-1554887358-1215.avif)
பேஷன் டிசைனிங் உலகத்தில் பிரபலமான பிரணவ் மிஸ்ரா தான் அவருடைய முன்னாள் காதலர். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தித்த நிலையில் சில வருடங்கள் காதலித்து இருக்கிறார்கள். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரேக்கப் ஆகியிருக்கிறது. பிரணவ் மிஸ்ரா தற்போது ஹியூமன் பிராண்டு பேஷன் டிசைனிங் கம்பெனியின் இயக்குனராக இருக்கிறார்.